Kathir News
Begin typing your search above and press return to search.

'தேசிய பிரச்சினையை பேசிய ஜனநாயக பாதுகாவலர் அண்ணாமலை' - மதுரை நீதிமன்றத்தின் பாராட்டு மழை

'ஜனநாயகத்தின் பாதுகாவலர்' என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பாராட்டியுள்ளார்.

தேசிய பிரச்சினையை பேசிய ஜனநாயக பாதுகாவலர் அண்ணாமலை - மதுரை நீதிமன்றத்தின் பாராட்டு மழை

Mohan RajBy : Mohan Raj

  |  28 July 2022 8:25 AM GMT

'ஜனநாயகத்தின் பாதுகாவலர்' என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பாராட்டியுள்ளார்.

மதுரையை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் தனது பாஸ்போர்ட்டை புதுப்பித்து வழங்க உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், 'நான் எனது பாஸ்போர்ட்டை புதுப்பித்து வழங்க கோரி பயண முகவர் நசுருதீன் என்பவரிடம் கலந்து 2019 ஆம் ஆண்டு கொடுத்து இருந்தேன்.

ஆனால் போலி பாஸ்போர்ட் வழங்கிய வழக்கில் போலீசார் பயண முகவர் மதுரையைச் சேர்ந்த நஸ்ருதீன் அலுவலகத்தில் சோதனை நடத்தினர் அப்பொழுது நான் எனது பாஸ்போர்ட்டையும் நசுருதீன் அலுவலகத்தில் இருந்து போலீசார் எடுத்து சென்று விட்டனர் நசுருதீன் பாஸ்போர்ட் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். எனவே எனது பாஸ்போர்ட்டை புதுப்பித்து வழங்கு உத்தரவிடம்' எனக் கூறியிருந்தார்.

அப்போது இந்த மனு நீதிபதி ஜி. ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்டிருந்த நீதிபதி மனுதாரரின் பாஸ்போர்ட்டை உரிய முறைப்படி புதுப்பிக்க வழங்க உத்தரவிட்டார்.

மேலும் போலி ஆவணங்கள் தாக்கல் செய்து இலங்கை சேர்ந்தவர்கள் இந்திய பாஸ்போர்ட் பெற்ற வழக்கு பொதுவெளியில் கவனத்திற்கு கொண்டு வந்த பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையை பாராட்டுகிறேன். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் ஜனநாயகத்தின் பாதுகாவலராக செயல்பட்டு உள்ளார்' என தெரிவித்து வழக்கை முடித்து வைத்து உத்திரவிட்டார் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்.


Source - News 18 Tamil Nadu

Next Story
கதிர் தொகுப்பு
Trending News