சென்னையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட துணை ஜனாதிபதி.!
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக நாடு முழுவதும் கடந்த மாதம் ஜனவரி 16ம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதில் முதல் கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கும், சுகாதாரப்பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்நிலையில், தற்போது 2வது கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டோர்கள் மற்றும் 45 வயதுடைய இணை நோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு கூறியிருந்தது.
அதன்படி இன்று பிரதமர் மோடி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
இந்நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
அதே போன்று ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாய்க்கும் தடுப்பூசி செலுத்திக்கொண்டார். நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.