தேர்தல் முடியும் வரை போலீசாருக்கு விடுமுறை இல்லை.. டி.ஜி.பி.யிடம் பறந்த உத்தரவு.!
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில், காவலர்கள் அனைவரும் விடுமுறை இன்றி பணியாற்ற வேண்டும் என்று டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
By : Thangavelu
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில், காவலர்கள் அனைவரும் விடுமுறை இன்றி பணியாற்ற வேண்டும் என்று டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுவதால், அதிகளவிலான பிரச்சனைகள் ஏற்படும். இதனை சமாளிக்க காவல்துறையினர் கட்டாயம் அதிகளவிலான பேர் பணியில் இருக்க வேண்டும். இது பற்றி டிஜிபி தேர்தல் ஆணையர்களிடம் ஆலோசனை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அனைத்து காவலர்களும் தேர்தல் முடியும் வரை விடுப்பு எடுக்க கூடாது. எமர்ஜென்சியாக இருந்தால் மட்டும் விடுப்பு எடுக்க முடியும் என்று டிஜிபி திரிபாதி அனுப்பியுள்ள சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நேரங்களில் அதிகளவிலான பணம் பட்டுவாடா செய்யப்படும். பரிசு பொருட்கள் எடுத்து செல்வார்கள் இதனை கண்காணிக்கும் பணி காவலர்களுக்கு மட்டுமே உள்ளது. இதனால்தான் இது போன்ற உத்தரவுகளை டிஜிபி பிறப்பித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.