தருமபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி போடுவதற்கு சிறப்பு ஏற்பாடு.!
தமிழக அரசு கொரோனா நோய் தொற்று ஒழிப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக செயல்பட்டு வருவதின் ஒரு பகுதியாக மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் சிறப்பு முகாம்கள் அல்லது அவர்களது வீடுகளிலோ தடுப்பூசி செலுத்த மாவட்ட ஆட்சியர் அவர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
By : Thangavelu
தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு கொரோனா நோய் தொற்று ஒழிப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக செயல்பட்டு வருவதின் ஒரு பகுதியாக மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் சிறப்பு முகாம்கள் அல்லது அவர்களது வீடுகளிலோ தடுப்பூசி செலுத்த மாவட்ட ஆட்சியர் அவர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தருமபுரி மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட தடுப்பூசி செலுத்த விருப்பமுள்ள மாற்றுத்திறனாளிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டுபாட்டு அறையில் உள்ள தொலைப்பேசி எண்: 04342,231500, 04342&1077, 04342&230067, 04342& 231508 மற்றும் 9360953737 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு ஆதார் அட்டை எண் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை எண் ஆகியவற்றை பதிவு செய்து தடுப்பூசி செலுத்தி பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்