தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை கலைப்பு: வியாபாரிகள் மகிழ்ச்சி.!
கடந்த 6ம் தேதி தேர்தல் முடிந்த நிலையில், தேர்தல் பறக்கும் படை சோதனை விலக்கிக் கொள்ளப்படும். பணம், நகை கொண்டு செல்ல கட்டுப்பாடுகள் இல்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்தார்.
By : Thangavelu
தருமபுரி மாவட்டத்தில், தேர்தல் முடிந்ததால் பறக்கும் படை சோதனை நிறைவு பெற்றது. பணம், நகை எடுத்துச் செல்வதற்கான கட்டுப்பாடு நீங்கியது.
தருமபுரி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கின்ற வகையில், மாவட்ட முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் இரவு, பகலாக சோதனை மேற்கொண்டு வந்தனர்.
இதனிடையே தேர்தல் கடந்த 6ம் தேதி நிறைவு பெற்றது. மாவட்டம் முழுவதும் நடைபெற்ற சோதனையில் இதுவரை ரூ.90 லட்சம் மதிப்பில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதே போன்று 196 சவரன் நகையும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில், கடந்த 6ம் தேதி தேர்தல் முடிந்த நிலையில், தேர்தல் பறக்கும் படை சோதனை விலக்கிக் கொள்ளப்படும். பணம், நகை கொண்டு செல்ல கட்டுப்பாடுகள் இல்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்தார். அவரது அறிவிப்புக்கு பின்னர் தருமபுரி மாவட்டத்தில் 96 தேர்தல் பறக்கும் படை கலைக்கப்பட்டது. இனிமேல் வியாபாரிகள் தங்களது பணத்தை நிம்மதியாக எடுத்துச்செல்லாம்.