நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் - எம்.எல்.ஏ., ஆலோசனை!
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து தருமபுரி பாமக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் ஆலோசனை நடத்தினார்.
By : Thangavelu
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து தருமபுரி பாமக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் ஆலோசனை நடத்தினார்.
தருமபுரியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாமக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் நகராட்சி, ஊராட்சி ஒன்றியம், ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அதிகாரிகள் கவுன்சிலர்கள் மற்றும் ஊராட்சி தலைவர்களிடம் தடுப்பு பணிகள் குறித்து கலந்து ஆலோசனை நடத்தி வருகின்றார்.
அந்த வகையில் இன்று நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் ஆய்வு பணியை மேற்கொண்டார்.
இந்த ஆய்வு பணியில் நல்லம்பள்ளி ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி பெரியசாமி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, கலைச்செல்வி, உதவி பொறியாளர் தமிழ்மணி ஒன்றிய மேற்பார்வையாளர் ஸ்ரீதர் சதாஜ், ஒன்றிய கவுன்சிலர்கள் காமராஜ் முருகன், ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வன் மூர்த்தி, முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.