Kathir News
Begin typing your search above and press return to search.

உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்கும் தருமபுரி தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ.!

தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் சாலையோர மக்களுக்கு உணவு வழங்கினார்.

உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்கும் தருமபுரி தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ.!
X

ThangaveluBy : Thangavelu

  |  15 May 2021 2:57 PM IST

தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் சாலையோர மக்களுக்கு உணவு வழங்கினார்.

தமிழகம் முழுவதும் கடந்த மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சமயங்களில் தினமும் வேலைக்கு சென்று உணவு சாப்பிடும் நபர்கள் கஷ்டப்படும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அது போன்றவர்களுக்கு அரசியல் பிரதிநிதிகள் தங்களால் முயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

அந்த வகையில், தருமபுரி நகரில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் உணவுகளை வழங்கினார். இதில் 100க்கும் மேற்பட்டவர்கள் உணவுகளை வாங்கி சென்றனர். இந்த நிகழ்வின்போது, தருமபுரி பாமக மாவட்ட செயலாளர் பெரியசாமி, மற்றும் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News