தருமபுரியில் ட்ரோன் கேமரா மூலம் போலீசார் கண்காணிப்பு.!
கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தருமபுரியில் வெளியில் சுற்றி திரிபவர்களை ட்ரோன் கேமரா மூலமாக போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
By : Thangavelu
கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தருமபுரியில் வெளியில் சுற்றி திரிபவர்களை ட்ரோன் கேமரா மூலமாக போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக மே 10ம் தேதி முதல் மே 24ம் தேதி வரை, ஊரடங்கை அரசு அமல்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் தடுப்புகளை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வெளியில் செல்லும்போது முககவசம் அணிந்து உள்ளனரா என்றும், கடைகளுக்கு செல்லும்போது சமூக இடைவெளியை முறையாக பின்பற்றுகிறார்களா எனவும் போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், தருமபுரி நகரில் தேவையின்றி பொதுமுடக்க காலத்தில் வெளியில் சுற்றிவருபவர்களை கண்டறிய ட்ரோன் கேமரா உதவியுடன் நகர் பகுதிகளில் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
அப்போது தருமபுரி பேருந்து நிலையம், நான்கு ரோடு பகுதிகள் வெறிச்சோடி காணப்படும் புகைப்படம் வெளியாகியுள்ளது.