மது வாங்குவதற்கு தருமபுரிக்கு நுழைந்த சேலம், நாமக்கல் மாவட்ட மதுபிரியர்கள்.!
தருமபுரி மாவட்டம், பாளையம்புதூர் சனி சந்தை டாஸ்மாக் கடைக்கு சேலம், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த மதுபிரியர்கள் குவிந்ததால் நீண்ட வரிரையில் காத்துக்கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By : Thangavelu
தருமபுரி மாவட்டம், பாளையம்புதூர் சனி சந்தை டாஸ்மாக் கடைக்கு சேலம், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த மதுபிரியர்கள் குவிந்ததால் நீண்ட வரிரையில் காத்துக்கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணாம முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனிடையே இன்று முதல் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதில் டாஸ்மாக் கடையும் திறப்பதற்கு தமிழக அரசு அறிவிப்பில் கூறப்பட்டது.
அதன்படி சேலம், நாமக்கல், கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களை தவிர மற்ற 27 மாவட்டங்களில் இன்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. இதே போன்று தருமபுரி மாவட்டத்தில் இன்று காலை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. இதனால் மது வாங்குவதற்காக சேலம், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ரகசியமாக தருமபுரி மாவட்டத்திற்கு சென்று மதுவாங்கி சென்றனர்.
இதனால் நீண்ட வரிசையில் மதுபிரியர்கள் காலை முதலே காத்துக்கிடந்தனர். இந்த சம்பவத்தால் தொப்பூர், பாளையம்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.