தருமபுரியில் 5 சட்டமன்ற தொகுதியில் 77.23 சதவீத வாக்குப்பதிவு.!
தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், தருமபுரி உள்ளிட்ட 5 சட்டமன்ற தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதியில் நேற்று (ஏப்ரல் 6) இரவு 7 மணி நிலவரப்படி 77.23 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், தருமபுரி உள்ளிட்ட 5 சட்டமன்ற தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெற்றது.
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர். வாக்குச்சாவடிகளுக்கு செல்லும் முன்னர் வாக்காளர்களுக்கு சானிடைசர் வழங்கப்பட்டது. இதன் பின்னர் பாலித்தீன் கையுறை வழங்கப்பட்டது. இதன் பின்னரே வாக்குச்சாவடிகளுக்குள் வாக்காளர்கள் அனுமதிக்கப்பட்டனர். மாவட்டத்தில் மொத்தம் 1,817 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. 7,268 பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். கூடுதல் பணியாளர்களும் தயார் நிலையில் இருந்தனர்.
இந்நிலையில், வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் சென்று வாக்களித்து வந்தனர். எந்த ஒரு பிரச்சனையும் இன்றி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.
அதன் படி இரவு 7 மணியளவு வாக்குப்பதிவு நிலவரப்படி 5 சட்டமன்ற தொகுதிகளிலும் 7.90 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. பதிவான வாக்குப்பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் தருமபுரி அரசு பொறியியல் கல்லூரியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் எடுத்து சென்றனர். இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி தொடங்கப்படும் என்பது குறிப்பிடப்பட்டது.