இயற்கை முறையில் விளைவித்த பொருட்கள் மட்டுமே விற்பனை.. தருமபுரியில் விவசாயிகள் நடத்தும் பிரத்யேக வாரச்சந்தை.!
தருமபுரியில் இயற்கை முறையில் விளைவித்த பொருட்கள் மட்டுமே விற்பனை செய்து வரும் வாரச்சந்தைக்கு செல்வதற்கு பொதுமக்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
By : Thangavelu
தருமபுரியில் இயற்கை முறையில் விளைவித்த பொருட்கள் மட்டுமே விற்பனை செய்து வரும் வாரச்சந்தைக்கு செல்வதற்கு பொதுமக்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
உணவு முறைகள் மனிதர்களின் வாழ்க்கையில் இன்றியமையாதது. ஆனால் தற்போதைய காலக்கட்டத்தில் உணவு தானியங்களை அதிகரிக்க அனைத்திற்கும் செயற்கை முறையில் தயாராகும் உரங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் விளைச்சல் அதிகரித்தாலும் மனிதர்களின் உடல் நலத்திற்கு மிகப்பெரிய தீங்கினை விளைவிக்கின்றன.
பண்டைய காலங்களில் அனைத்தும் இயற்கை முறையில் விவசாயங்கள் மேற்கொள்ளப்பட்டது. மாட்டுச்சானம், மற்றும் இலைகள் மட்க வைத்து நிலத்திற்கு உரமாக போட்டு வந்தனர். இதனால் தானியங்கள் அதிகமாக விளைச்சலும் இருந்தது. இதனை சாப்பிடுவதால் மனிதர்களின் உடல்நலமும் ஆரோக்கியமாக இருந்தது.
மக்கள் தொகை பெருக்கம் மற்றும் தானியங்கள் தேவை அதிகரிப்பால், அனைத்தும் செயற்கை முறைக்கு விவசாயிகளும் தள்ளப்பட்டனர். இதனால் மனிதர்களின் வாழ்க்கை முறையும் மாறத்தொடங்கியது. இதனை மீண்டும் மாற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் முயற்சிகள் செய்து வருகிறது. இதற்காக இயற்கை விவசாயங்கள் மேற்கொள்வதற்கு அரசு மானியம் வழங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் இயற்கை முறையில் விளைவிக்கப்படும் பொருட்கள் மட்டுமே வாரச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தருமபுரி டவுனில் இன்று (ஞாயிறு) கூடப்பட்ட சந்தையில் அனைத்து விதமான இயற்கை பொருட்கள் விற்பனைக்காக விவசாயிகள் எடுத்து வந்திருந்தனர்.
பொதுமக்களும் ஆர்வமாக வாங்கிச்சென்றனர். அனைத்து வகையான உணவுப்பொருட்களும் கிடைக்கிறது. உடல்நலத்திற்கு ஆரோக்கியம் என்பதால் பொதுமக்களும் ஆவலுடன் சந்தைக்கு வருகை புரிகின்றனர்.
உணவு பொருட்கள், எண்ணெய் வகைகள், பலகாரங்கள், டீ உள்ளிட்ட அனைத்து பொருட்களும் சந்தையில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். அதிலும் விவசாயிகள் தங்களின் பொருட்களுக்கு தாங்களே விலையை நிர்ணயம் செய்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.