Kathir News
Begin typing your search above and press return to search.

கல்லூரி மாணவிகளை ஆசைக்கு இணங்க கட்டாயப்படுத்திய அ.ம.மு.க வேட்பாளர் - அடிக்கடி லேடீஸ் ஹாஸ்டலில் அரங்கேறிய சம்பவம்!

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அமமுக வேட்பாளரான கல்லூரி தாளாளர்

கல்லூரி மாணவிகளை ஆசைக்கு இணங்க கட்டாயப்படுத்திய  அ.ம.மு.க வேட்பாளர் - அடிக்கடி லேடீஸ் ஹாஸ்டலில் அரங்கேறிய சம்பவம்!
X

MuruganandhamBy : Muruganandham

  |  20 Nov 2021 6:16 PM IST

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அமமுக வேட்பாளரான கல்லூரி தாளாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முத்தினம்பட்டி அருகே உள்ள நர்ஸிங் மற்றும் கேட்ரிங் கல்லூரியில், ஜோதிமுருகன் என்பவர் தாளாளராக பதவி வகித்து வருகிறார். இவர் கல்லூரிக்கு வரும்போதெல்லாம் சில மாணவிகளை அழைத்து அவர்களுக்குத் தொல்லைக் கொடுத்தார் என்றும் அதேபோல், இவரின் பாலிடெக்னிக் கல்லூரிக்கு மாணவிகளை தனது வண்டியில் அழைத்துச் சென்று பாடல்களுக்கு அவர்களை ஆடச் சொல்லி, பாலியல் தொந்தரவு தந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் முதலாம் ஆண்டு மாணவி, தாளாளரின் தொல்லை காரணமாக கல்லூரியில் தொடர்ந்து படிக்க விருப்பமில்லாமல் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாற்றுச் சான்றிதழ் வாங்கிக் கொண்டு சென்றுள்ளார். இந்தத் தகவல் சக மாணவிகளுக்குத் தெரியவரவே, ஒட்டுமொத்த மாணவிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்போது விடுதி காப்பாளர் அர்ச்சனாவை போலீசார் கைது செய்து காவல்நிலையத்தில் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், தலைமறைவான தாளாளர் ஜோதிமுருகனை போலீசார் தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் காவல் நிலையத்திற்கு பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் பெற்றோர்கள் அழைத்துவரப்பட்டு அவர்களிடமும் விசாரணை நடைபெற்று வருவதை போலீசார் தெரிவித்ததை மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி அமமுக வேட்பாளராக போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.





Next Story
கதிர் தொகுப்பு
Trending News