Kathir News
Begin typing your search above and press return to search.

நீர்நிலைகளில் உள்ள கோயில்களை அகற்றுவதில் மட்டும் ஏன் பாரபட்சம்? தி.மு.க. அரசு கால அவகாசம் வழங்குவதில்லை என புகார்!

நீர்நிலைகளில் கட்டப்பட்டுள்ள கோயில்களை அகற்றும்போது பாரபட்சம் பார்க்கப்படுகிறது, கோயில் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய காலஅவகாசம் வழங்கப்படுவதில்லை என்று திமுக அரசு மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

நீர்நிலைகளில் உள்ள கோயில்களை அகற்றுவதில் மட்டும் ஏன் பாரபட்சம்? தி.மு.க. அரசு கால அவகாசம் வழங்குவதில்லை என புகார்!

ThangaveluBy : Thangavelu

  |  3 Dec 2021 8:12 AM GMT

நீர்நிலைகளில் கட்டப்பட்டுள்ள கோயில்களை அகற்றும்போது பாரபட்சம் பார்க்கப்படுகிறது, கோயில் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய காலஅவகாசம் வழங்கப்படுவதில்லை என்று திமுக அரசு மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கு ஒன்றில் திமுக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு வகையிலான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி இதற்கு முன்னர் இருந்தபடி பழைய நீர் நிலைகள் கொண்டுவரப்பட வேண்டும் என்பதில் உயர்நீதிமன்றம் உறுதியுடன் இருக்கிறது. இதற்காக திமுக அரசுக்கு ஒரு வாரம் கெடுவும் விதித்துள்ளது. அப்படி நீர்நிலைகள் அகற்றப்பட்டதற்கான ஆவணங்களை தாக்கல் செய்யப்படவில்லை எனில் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக நேரிடும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே பல்வேறு இடங்களில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. அதன்படி குளங்கள், ஏரிகள், ஓடை புறம்போக்கு நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள வீடுகள், தனியார் கட்டடங்கள், கோயில்கள் உள்ளிட்டவை அகற்றப்பட்டு வருகிறது. இதனிடையே கோவை நகரில் உள்ள உக்கடம் பெரியகுளம், முத்தண்ணன் குளம், வாலாங்குளம், கிருஷ்ணாம்பதி குளம், குறிச்சி குளம் உள்ளிட்ட குளங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அப்பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு தற்போது மாற்று குடியிருப்புகள் வழங்கப்படுகிறது. ஆனால் கோயில்களை இடிக்கும்போது மட்டும் எவ்வித அவகாசமும் மாற்று இடமும் வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

அதாவது முத்தண்ணன் குளக்கரையில் கட்டப்பட்டிருந்த முத்து மாரியம்மன் கோயில், அங்காளம்மன் கோயில், கருப்பசாமி கோயில் உள்ளிட்ட 9 கோயில்கள் ஒரே நேரத்தில் இடிக்கப்பட்டது. இந்துக்களை வஞ்சிக்கின்ற வகையில் இடித்து தள்ளப்பட்டுள்ளதாக பாஜக மற்றும் இந்து அமைப்புகள் குற்றம்சாட்டி வருகிறது. இது போன்று இடிக்கப்படும் கோயில்கள் பற்றிய தகவல்களை நிர்வாகங்களுக்கு தெரிவிப்பதும் இல்லை, அவகாசமும் அளிக்கப்படுவதில்லை என புகார் எழுந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் கனக காளீஸ்வரர் கோயில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இந்துக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது பற்றிய தகவல்கள் சமூக ஊடகங்களில் காட்டுத்தீ போன்று பரவியது. திமுக அரசு நீர்நிலைகளில் உள்ள கோயில்களை இடிப்பதில் காலஅவகாசம் வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டுகளை இந்துக்கள் எழுப்பியுள்ளனர். ஆறு மாதங்களில் சுமார் 153 கோயில்கள் இடிக்கப்பட்டதாக இந்து அமைப்பு குற்றச்சாட்டியுள்ளது.

Source: Hindu Tamil

Image Courtesy: Twiter


Next Story
கதிர் தொகுப்பு
Trending News