பள்ளி சிறுவருக்கு மிட்டாய் கொடுக்க மறுத்தது சாதி பாகுபாடு பின்னணியா? அதிர்ச்சியூட்டும் உண்மைகள்!
சங்கரன்கோவில் அருகே பட்டியல் இன மாணவர்களுக்கு பொருட்களை தர மறுத்த கடைக்கு சீல் வைப்பு, இரண்டு பேர் கைது.
By : Bharathi Latha
தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் அருகே பஞ்சாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் மகேஸ்வரர இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று முன்தினம் அப்பகுதியை சேர்ந்த ஒரு தரப்பு பள்ளிக்கூடம் மாணவர்கள் தின்பண்டம் உள்ளிட்ட பொருட்களை வாங்க சென்றார்கள். அப்போது அவர்களுக்கு பொருட்களை கொடுக்க மறுத்த கடை உரிமையாளர் அதனை வீடியோவாக பதிவு செய்து whatsapp ல் வெளியிட்டுள்ளார்.
இது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானதும், பின்னர் இது குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு பஞ்சாங்குளம் கிராமத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட தீண்டாமை வழக்கில் வாபஸ் பெற கோரி ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரை வலியுறுத்தினார்கள். இதற்கு அவர்கள் மறுத்துள்ளார்கள். இதனால் அந்த தரப்பினரின் குழந்தைகளுக்கு கடை உரிமையாளர் தனது பெட்டிக்கடையில் பொருட்களை வழங்க மறுத்துள்ள வீடியோ தான் தற்போது சமயத்தில் தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இது பற்றி விசாரணை மேற்கொண்ட போலீசார் இரண்டு பேரை கைது செய்துள்ளார்கள். மேலும் கடையின் உரிமையாளர் தேடப்பட்டு வருகிறார் கடைக்கு தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது சாதிய பாகுபாடு காரணமாக பள்ளி மாணவர்களுக்கு தின்பண்டம் கொடுக்க மறுத்த கடையின் உரிமையாளர் மகேஸ்வரன் தலைமறைவாகி இருக்கிறார். அவரை தேடுவதற்கு தற்போது போலீசார் முயற்சி செய்து வருகிறார்கள்.
Input & Image courtesy: Vikatan News