சென்னை: வீட்டு வாடகை கேட்டு தாக்குதல்: தே.மு.தி.க. பிரமுகர் அதிரடி கைது.!
சென்னையை அடுத்துள்ள குன்றத்தூரில் வீட்டு வாடகை தராததால் வடமாநில இளைஞர்களை அடித்து துன்புறுத்திய தேமுதிக பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
By : Thangavelu
சென்னையை அடுத்துள்ள குன்றத்தூரில் வீட்டு வாடகை தராததால் வடமாநில இளைஞர்களை அடித்து துன்புறுத்திய தேமுதிக பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, குன்றத்தூரில் வசித்து வருபவர் சுரேஷ் ராஜ். இவர் தேமுதிகவில் நிர்வாகியாக உள்ளார். இவருக்கு சொந்தமாக வீடுகள் உள்ளது. அதில் வடமாநில இளைஞர்கள் 30க்கும் அதிகமானோர்கள் வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளனர்.
தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் பலர் தங்களது சொந்த மாநிலமான ஒடிசாவிற்கு புறப்பட்டு சென்றுள்ளனர். சிலர் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையின்றி அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ளனர். இந்த சமயத்தில் சுரேஷ் ராஜ் வீட்டு வாடகை கேட்டு இளைஞர்களை அடித்து துன்புறுத்தியுள்ளார்.
இது பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியது. இதனையடுத்து சுரேஷ் ராஜை போலீசார் கைது செய்தனர்.
இது போன்றவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.