Kathir News
Begin typing your search above and press return to search.

திருமழிசையாழ்வார் பிறந்த இடத்தில் தி.மு.க., பிரமுகர் வணிக வளாக கட்டிடம் எழுப்புகிறார் !அறநிலையதுறை தூங்குகிறதா ?

திருமழிசையாழ்வார் பிறந்த இடத்தில் தி.மு.க., பிரமுகர் வணிக வளாக கட்டிடம் எழுப்புகிறார் !அறநிலையதுறை தூங்குகிறதா ?
X

DhivakarBy : Dhivakar

  |  21 Oct 2021 4:02 PM IST

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பேரூராட்சியில், திருமழிசையாழ்வார் பிறந்த இடத்தில் தி.மு.க., பிரமுகர் ஒருவரால் வணிக வளாகம் கட்டிடம் எழுப்பும் பணிகள் நடந்து வருகிறது.

திருமழிசை பேரூராட்சியில், மடவிளாகம் என்ற பகுதியில், திருமழிசையாழ்வார் பிறந்தார், இப்பகுதியில் அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலங்களை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலத்தில் கட்டடங்கள் கட்ட அனுமதி கிடையாது. இந்த விதிமுறை இருந்த போதிலும் , திருமழிசையாழ்வார் பிறந்த இடத்தை, குத்தகைக்கு எடுத்த தி.மு.க., பிரமுகர் ஒருவர் சாலை ஓரமாக வணிக வளாக கட்டிடம் காட்டுகிறார்.




இது திருமழிசை கோவில் நிர்வாகத்தையும், பக்தர்களையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருமழிசை கோவில் நிர்வாக பொறுப்பு அதிகாரி நாராயணன் "அறநிலையத் துறைக்கு சொந்தமான இடத்தை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தலாம்; நிரந்தர கட்டடம் கட்ட அனுமதி கிடையாது. திருமழிசையாழ்வார் பிறந்த இடத்தில் கட்டடம் கட்டும் நபரிடம், நிரந்தர கட்டடம் எதுவும் கட்டக்கூடாது என எச்சரித்துள்ளோம். நேரில் ஆய்வு செய்து, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்." என்று கூறினார்.

இந்த சம்பவம் குறித்து அறநிலையத் துறை தீர விசாரிக்கவேண்டும் என்று பலதரப்பிலிருந்து அறிவுரைகள் வழங்கப்பட்டுவருகிறது.

Dinamalar


Next Story
கதிர் தொகுப்பு
Trending News