இளம் பெண்ணை கிண்டல் செய்த கயவர்களை கைது செய்ய சென்ற போலீசாரை தடுத்த தி.மு.க வட்ட பொருளாளர்.!
இளம் பெண்ணை கிண்டல் செய்த கயவர்களை கைது செய்ய சென்ற போலீசாரை தடுத்த தி.மு.க வட்ட பொருளாளர்.!
By : Mohan Raj
ஒரு கட்சியின் செல்வாக்கு அந்த கட்சியில் அடிப்படை தொண்டர்களை மற்றும் நிர்வாகிகளை வைத்தும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் ஏற்கனவே தி.மு.க மக்கள் மத்தியில் ஊழல் கட்சி என்ற பெயரில் உள்ளது.
ஆனால் இப்பொது ரவுடிகள் மற்றும் சமூக விரோத செயல்பவர்களின் கூடாரமாக திகழ்கிறது. அந்த வகையில் சென்னை கொடுங்கையூரில் இளம் பெண்ணை கேலி செய்து தாக்கியதாக 2 இளைஞர்களையும், அவர்களை விசாரணைக்கு அழைத்து செல்ல விடாமல் தடுத்து தகராறில் ஈடுபட்ட தி.மு.க நிர்வாகி உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சீனிவாச பெருமாள் கோயில் தெருவில் இளம் பெண் ஒருவர் புடவை அணிந்து நேற்று நடந்து சென்றபோது கல்லூரி மாணவர் ஆகாஷ் மற்றும் உறவினர் வெங்கடசன் ஆகிய இருவரும் கேலி செய்ததாக கூறப்படுகிறது.
பின்னர் இதை தட்டிக்கேட்ட தாயாரையும் அந்த இருவரும் தாக்கியுள்ளனர். புகாரின்பேரில் இளம் பெண்ணை கேலி செய்த இருவரையும் விசாரணைக்கு அழைத்து செல்ல எஸ்.ஐ. சிவசங்கரன் உள்ளிட்ட 2 போலீசார் வந்தபோது அவர்களிடம் உறவினர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர், பின் ஆகாஷ், வெங்கடேசன், ஆகாசின் தந்தை சிற்றரசு, சிற்றரசின் சகோதரரும் வெங்கடேசனின் தந்தையுமான மோகன், இன்னொரு சகோதரரும் தி.மு.க வட்ட பொருளாளருமான அமுல்ராஜ், உறவினர் சதாசிவத்தை கைது செய்து அழைத்து சென்றனர். இளம் பெண்ணை கிண்டல் செய்த நபர்களை கைது செய்யவிடாமல் தி.மு.க வட்ட பொருளாளர் போலீசாரை தடுத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க'வினர் ஒன்று தவறு செய்பவர்களாக இருக்கின்றனர் அல்லது தவறு செய்தால் வந்து போலீசார் கைது செய்தால் அதனை தடுப்பவர்களாக இருக்கின்றனர். ஆக மொத்தத்தில் சமுதாயத்தில் தி.மு.க'வினர் ஓர் சமூக விரோத கூடாரமாக மாறியுள்ளனர்.