கோர்ட் ஆர்டரை திருத்தி எழுதி வசமாக சிக்கிய தி.மு.க கவுன்சிலர் - கடுப்பான நீதிபதிகள்!
ஆள் கடத்தல் வழக்கில் போலி ஆவணங்களை சமர்ப்பித்த தி.மு.க பெண் கவுன்சிலர் கைது.
By : Bharathi Latha
சென்னையில் தொழிலதிபர் கடத்தல் வழக்கில் தற்பொழுது தலைமறைவாக இருந்த தி.மு.க பெண் கவுன்சிலர் மற்றும் அவரது கணவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். சென்னை சோழிங்கநல்லூர் காரம்பாக்கம் என்ற பகுதியை சேர்ந்தவர்தான் அமர்ராம். அவர் அந்த பகுதியில் தனக்கு சொந்தமான அடகு கடை ஒன்றே நடத்தி வந்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு மயிலாப்பூரைச் சேர்ந்த தி.மு.க வட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் 58 சென்ட் நிலத்தை 60 லட்சம் முன்பணம் கொடுத்து பத்திரப்பதிவு செய்து இருந்தாராம். அதற்கு அடுத்த வருடமே நிலத்திற்கான முழு தொகையும் கொடுத்து இருக்கிறார். இந்த நிலையில் நிலப்பிரச்சினை தொடர்பாக இவருடைய வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
கடந்த அக்டோபர் மாதம் அமர்ராம் மெரினா காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் ஒன்றை கொடுத்திருக்கிறார். குறிப்பாக அவர் தன்னுடைய புகாரில் கூறும் பொழுது, வழக்கறிஞர் செந்தமிழ் நிலப்பிரச்சினை குறித்து பேச மெரினா கடற்கரைக்கு என்னை அழைத்தார். மெரினா கடற்கரையில் உள்ள லைட் ஹவுஸ் அருகில் வந்து பொழுது என்னை அடையாளம் தெரியாத நான்கு பேர் காரில் கடத்தி சென்றார்கள். பிறகு கார் திருபேரூர் பகுதியில் உள்ள பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றது. அங்கு என்னுடைய நிலத்தை விற்பனை செய்வதாக கூறி கிருஷ்ணமூர்த்தி என்பவர் நின்று கொண்டிருந்தார். மேலும் அவருடைய மனைவி குறிப்பாக அவர் தி.மு.க கவுன்சிலராக இருக்கிறார்.
அவரும் சேர்ந்து ரவுடிகளுடன் என்னை மிரட்டி சுமார் 25 கோடி ரூபாய் மேல் மதிப்புள்ள நிலத்தை வெறும் நிலத்தை 60 லட்சம் கொடுத்து ஒப்பந்தம் ரத்து செய்வதாக என்னை காரில் கடத்தி வற்புறுத்தினார்கள். ஒப்பந்த ரத்து பத்திரத்தில் கையெழுத்து போட வேண்டும் என்றும் மிரட்டினார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன் அடிப்படையில் இரண்டு பேரும் கைது செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் இரண்டு பேரும் தற்போது தலைமுறைவாகி இருக்கிறார்கள். இந்நிலையில் தி.மு.க கவுன்சிலர் விமலா அவரது கணவர் தி.மு.க வட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் 10 ஆள் கடத்தல் நபர்களும் கொலை மிரட்டல், சொத்தை அபகரித்தல் உள்ளிட்ட வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
Input & Image courtesy: News