நெல்லை: விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டவர் மரணம்! தி.மு.க அரசின் காவல்துறை மீது மக்கள் அச்சம்!
By : Dhivakar
திருநெல்வேலி மாவட்டத்தில், காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தமிழகத்தில் கடந்த எட்டு மாதங்களாக சட்ட ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாக அனைத்துத் தரப்பு மக்களும் குற்றச்சாட்டு எழுப்பி வரும் நிலையில், சட்ட ஒழுங்கைக் காக்கும் காவல் துறையின் நடவடிக்கைகள் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்து வருகிறது.
திருநெல்வேலி மாவட்டம் பேலம்பாளையம் பகுதியில், வசித்து வருபவர் சுலைமான்.. இவர் மீது 30க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்நிலையில், திருடப்பட்ட வாகனம் ஒன்றை சுலைமான் ஓட்டிச் சென்றபோது வாகன உரிமையாளர் சுலைமானை தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.
காவல் நிலைய அதிகாரிகள் சுலைமானிடம் விசாரணையில் ஈடுபட்டபோது, சுலைமான் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக சுலைமானை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் காவல்துறையினர்.
மருத்துவமனையில் சுலைமானின் உடலை சோதித்த மருத்துவர்கள், அவர் முன்னமே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.