மதுக்கடை மூடல் வேண்டும் என கொதித்த தி.மு.க நிர்வாகி - ஆடிப்போன சாராய ஆலை அதிபர் டி.ஆர்.பாலு.!
மதுக்கடை மூடல் வேண்டும் என கொதித்த தி.மு.க நிர்வாகி - ஆடிப்போன சாராய ஆலை அதிபர் டி.ஆர்.பாலு.!
By : Mohan Raj
தமிழகத்தில் பெரும்பாலான பெற்றோர் மற்றும் குடும்ப பெண்களின் எதிர்பார்ப்பு டாஸ்மாக் எனும் அரக்கனுக்கு மூடுவிழா நடத்துவதாகும், இன்றைய சூழலில் எந்த கட்சி டாஸ்மாக் மூடுவிழாவை முன்னெடுக்கிறதோ அந்த கட்சி கண்டிப்பாக மக்கள் மனதில், குறிப்பாக பெண்கள் மத்தியிலும், வயதானவர்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பை கண்டிப்பாக பெறும்.
ஆனால் தமிழகத்தில் இரு திராவிட கட்சிகளும் அந்த விஷயத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காது. அதிலும் குறிப்பாக தி.மு.க டாஸ்மாக் விஷயத்தில் வாயை திறக்காது ஏனெனில் தி.மு.க'வின் முக்கிய தலைவர்கள் சிலர் சாராய ஆலை தனக்கு சொந்தமாக வைத்திருப்பதுதான் காரணம்.
இன்றைய சூழலில் இளைஞர்கள் பலர் குடியால் சீரழிவதும், பல இளம்பெண்கள் கனவனை இழந்தி நிற்கதியாக நிற்க இந்த டாஸ்மாக் மற்றும் இதுபோன்ற அரசியல்வாதிகளின் சாராய ஆலையே காரணம். இன்னும் 6 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வரும் வேளையில் எந்த கட்சியும் இதுவரை மதுபான கடைகறை மூடுவது பற்றியும் பேசவில்லை.
இந்த சூழலில் தி.மு.க 2021 சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியை முடிவு செய்ய தனியாக குழு அமைத்து மக்களிடம் கருத்து கேட்கிறேன் பேர்வழி என்ற பெயரில் ஓர் அரசியல் நாடகத்தை நடத்தி வருகிறது. இதில் ஓர் நிகழ்வாக தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர், டி.ஆர்.பாலு தலைமையில், ஊர் ஊராகச் சென்று கருத்து கேட்டுகொண்டு இருக்கிறார்கள்.
திருப்பூரில் நடத்திய கருத்து கேட்பு கூட்டத்தில் பேசிய கட்சி நிர்வாகி ஒருவர் 'தயவு செய்து, தேர்தல் அறிக்கையில், மதுக்கடைகள் மூடல் குறித்து குறிப்பிட வேண்டாம். போன முறை நாம் தோற்க, அதுவும் ஒரு காரணம்' எனக் கூறியிருக்கிறார்.
அதுவும் 'கோல்டன் வாட்ஸ்' எனப்படும் சாராய ஆலையை நடத்தும் டி.ஆர்.பாலுவை அருகில் வைத்துக்கொண்டே. உடனே டி.ஆர்.பாலுவின் முகத்தில் ஈயாடவில்லையாம், காரணம் எங்கே மதுக்கடைகள் மூடல் என தன் மடியில் கைவைத்துவிடுவார்களோ என்ற பயம்தான் இந்த மூத்த உடன்பிறப்புவிற்கு.
அப்போது மூத்த நிர்வாகி ஒருவர் எழுந்து, 'நாம், ஆட்சிக்கு வராவிட்டாலும் பரவாயில்லை. கட்டாயம், மதுக்கடைகள் அடைப்பை அறிக்கையில் கொண்டு வரவேண்டும் என குரல் கொடுத்திருக்கிறார்.
இதைகேட்ட டி.ஆர்.பாலுவிற்கு உள்ளூர உதறல் எடுக்க துவங்கிவிட்டதாம். என்னதான் தி.மு.க வெளியில் மக்களின் காவலன் என காட்டிக்கொண்டாலும் உண்மையில் தி.மு.க'விடமிருந்து தான் மக்களை காக்க வேண்டிய சூழல் உள்ளதால் தி.மு.க'வின் நாடகம் அனைத்தும் மக்களிடத்தில் சாயம் வெளுத்து கொண்டிருக்கிறது.