தி.மு.கவின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொடிக்கம்பங்கள்: அகற்றும் முயற்சியில் ஒருவர் பலி!
தி.மு.க கொடி கம்பங்கள் அகற்றுப்பணியின் போது மின்சாரம் தாக்கி ஒருவர் பலி.
By : Bharathi Latha
காரைக்குடியில் தி.மு.க கொடி கம்பங்கள் அகற்றும் பணியில் விடுபட்ட கான்ட்ராக்டர் ஒருவர் மீது மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. காரைக்குடியில் நடந்த வேலை வாய்ப்பு முகாம் மற்றும் அறிவுத்தார் கட்டிடப் பணிகள் ஆய்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இளைஞர நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி காரைக்குடிக்கு வருகை தந்தார். அப்பொழுது அவரை வரவேற்கும் விதமாக தி.மு.க கட்சியின் சார்பில் காரைக்கால் முழுவதும் ஆயிரக்கணக்கான கொடிக்கம்பங்கள் நடும் பணி கடந்த இரண்டு நாட்களாக தீவிரமாக நடைபெற்று வந்தது.
நிகழ்ச்சி முடிந்த பிறகு இரவில் கொடுக்காமல் அவற்றின் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தார்கள். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அனிபாளத்தைச் சேர்ந்த பழனியப்பன் மகன் வீர மலை என்பவர் கொடி கம்பத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டார். அப்பொழுது மேலே சென்ற மின்கம்பத்தின் மீது கொடிக்கம்பம் உரசியதால் மின்சாரம் தாக்கி வீரமலை சமூக இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து காரைக்குடி போலீசார் விசாரித்து வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள். மேலும் கொடி கம்பம் அகற்றும் பணியில் போதிய பாதுகாப்பு வழங்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இரவு நேரத்தில் இது நடைபெற்றதால் கவனம் சிதறல் காரணமாக இந்த சம்பவம் அரங்கேறியதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy: Dinamalar