'மழைக்காலம் வருது சரக்கு பாட்டில் எல்லாம் பத்திரம்' - மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டாஸ்மாக் கடையை சிறப்பு அக்கறையாக கவனிக்கும் தி.மு.க அரசு
மழைக்காலம் வருவதால் டாஸ்மாக் மதுபான கடையில் மது பாட்டில்களை பத்திரமாக வைக்குமாறு தமிழக அரசு டாஸ்மாக் கடைகளுக்கு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.

By : Mohan Raj
மழைக்காலம் வருவதால் டாஸ்மாக் மதுபான கடையில் மது பாட்டில்களை பத்திரமாக வைக்குமாறு தமிழக அரசு டாஸ்மாக் கடைகளுக்கு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுபான பெட்டிகளை பாதுகாப்பாக வைக்க தமிழக அரசு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு உத்தரவிட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் அனைத்து துறைகளிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள துறை சார்ந்த அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பி வருகின்றனர்.
அந்த வகையில் டாஸ்மாக் கடைகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறித்த சுற்றறிக்கை தமிழ்நாடு வாணிப கழகம் அனுப்பியுள்ளது. இதில் மதுபான கடைகளில் உள்ள சரக்குகள், பதிவேடுகள் கோப்புகளுக்கு எதிர்வரும் மனங்களுக்கு பருவமழையால் எந்தவித சேதாரமும் மேற்படாத வண்ணம் உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதுகாப்பான முறையில் வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தாழ்வான பகுதியில் உள்ள மதுபான சில்லறை விற்பனை கடைகளில் உள்ள மதுபான பெட்டிகள், பதிவேடுகள் மற்றும் கோப்புகள் மழை வெள்ள நீரால் பாதிக்கப்படாமல் இருக்க அந்த சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
