Kathir News
Begin typing your search above and press return to search.

ஸ்ரீபெரும்புதூர் அருகே சிவன் கோயிலை இடித்து தள்ளிய தி.மு.க. அரசு: பக்தர்கள் கடும் அதிர்ச்சி!

ஸ்ரீபெரும்புதூர் அருகே ஆக்கிரமிப்பு இடத்தில் இருப்பதாக கூறி சிவன் கோயிலை வருவாய்த்துறையினர் ஜேசிபி இயந்திரத்தால் இடித்து தரைமட்டமாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் அருகே சிவன் கோயிலை இடித்து தள்ளிய தி.மு.க. அரசு: பக்தர்கள் கடும் அதிர்ச்சி!
X

ThangaveluBy : Thangavelu

  |  27 Nov 2021 8:34 AM GMT

ஸ்ரீபெரும்புதூர் அருகே ஆக்கிரமிப்பு இடத்தில் இருப்பதாக கூறி சிவன் கோயிலை வருவாய்த்துறையினர் ஜேசிபி இயந்திரத்தால் இடித்து தரைமட்டமாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவிற்குட்பட்ட கிளாய் என்ற கிராமம் உள்ளது. அங்கு ஏரி கலங்கள் அருகே சுமார் 12.5 ஏக்கர் ஓடை புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்த இடங்களுக்கு சென்று பழைய வரைபடங்களை வைத்து அளந்தபோது, இதில் ஓடையை ஆக்கிரமித்து ஒரு கேன்டீன் மற்றும் சிவன் கோயில் கட்டப்பட்டுள்ளது தெரியவந்தது.


இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோயில் மற்றும் கேன்டீனை இடிக்க உத்தரவிட்டனர். அதன்படி கனக காஸீவரர் கோயில் சுவர், குடிநீர் தொட்டி மற்றும் பக்தர்கள் சாப்பிடும் அன்னதானக் கூடத்தையும் இடித்து தரைமட்டமாக்கினர். இரவு நேரமானால் ஆக்கிரமிப்பு பணிகள் நிறுத்தப்பட்டு மீண்டும் நேற்று காலை (நவம்பர் 26) தொடங்கியது.

இது பற்றி அருகாமையில் உள்ள ஊர் மக்கள் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று கோயிலை இடிக்கக்கூடாது என்று அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனை கேட்டுக்கொள்ளாத வருவாய்த்துறையினர் போலீசார் உதவியுடன் பக்தர்களை விரட்டியடித்து விட்டு கனகாம்பிகை சன்னதி, சிவலிங்க வடிவிலான கனக காளீஸ்வரர், கோயில் ராஜகோபுரம் ஆகியவற்றை இடித்து தரைமட்டமாக்கினர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பக்தர்கள் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதங்களில் ஈடுபட்டனர். மேலும், கோயில் இடிக்கப்பட்டதை கேள்விப்பட்ட பாஜக பிரமுகர் அஸ்வத்தாமன் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். கோயில் சொத்தில் அரசு வரும்போது, அரசு சொத்தில் கோயில் வரக்கூடாதா? கலெக்டர் ஆபிஸ் முதல் கழிவறை வரை அத்தனைக்கும் கோயில் நிலத்தை எடுத்துக்கொள்ளும் அரசு, சின்ன இடத்தைக்கூட கோயிலுக்கு விட்டுக்கொடுக்காமல் இடித்து தள்ளுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source: Dinamalar

Image Courtesy: Twiter


Next Story
கதிர் தொகுப்பு
Trending News