தி.மு.க அரசின் அலட்சியத்தினால் பலியான 8 உயிர்கள் - அம்பலப்படுத்திய அண்ணாமலை!
தி.மு.க அரசின் அலட்சியத்தினால் சுமார் 8 உயிர்கள் இதுவரை ஆன்லைன் சூதாட்டத்திற்கு பலியாகி இருக்கிறது.
By : Bharathi Latha
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் ஏற்கனவே தி.மு.க அரசின் உண்மை முகத்தை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும், குறிப்பாக ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான அவர்களின் பொய்யான நாடகத்தை மக்களுக்கு அம்பலப்படுத்த வேண்டும் என்று கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக கவர்னர் ரவி அவர்களை சந்தித்து இது குறித்து பேசினார். மேலும் தி.மு.க ஆட்சியில் நிகழும் அட்டூழியங்கள் பற்றியும் அவர் ஆதாரத்துடன் தன்னுடைய புகாரை சமர்ப்பித்து இருந்தார்.
ஆன்லைன் சூதாட்டம் தடைக்கு தமிழக கவர்னர் தான் அனுமதி தரவில்லை என்று தி.மு.க அரசு தன்னுடைய தவறை இதுவரை மறைத்து வந்தது. ஆனால் உண்மையில், அரசாணை பிறப்பிக்காமல் அவசர சட்டம் இயற்றி என்ன பயன்? என்று தமிழக பா.ஜ.க கேள்வி எழுப்பு இருந்தது அமைச்சரும் தற்போது அதை ஒப்புக்கொண்டு இருக்கிறார். மேலும் இது தொடர்பான ட்விட்டர் பதிவில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறுகையில்,"தங்கள் திறனற்ற தன்மையை மறைக்க பொய்களைப் பரப்பி மாண்புமிகு தமிழக ஆளுநரின் மேல் பழியை போட்டுக் கொண்டிருந்த திமுகவினர் வெட்கி தலை குனிய வேண்டும்.
இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த திறனற்ற தி.மு.க அரசின் சட்டத்துறை அமைச்சரான ரகுபதி அவர்கள் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய கொண்டுவரப்பட்ட அவசர சட்டத்திற்கு அரசாணை பிறப்பிக்கப்படவில்லை என்று ஒப்புக் கொண்டுள்ளார். ஆளும் தி.மு.க அரசின் திறனின்மை மற்றும் மெத்தன போக்கினால் அவசர சட்டம் நடைமுறைப் படுத்தப்படாமல் எட்டு உயிர்கள் பலியானதற்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்" என்றும் கூறியிருக்கிறார்.
Input & Image courtesy: Twitter