Kathir News
Begin typing your search above and press return to search.

இரண்டு மாதமாக சம்பளம் வழங்காமல் இழுத்தடிக்கும் தி.மு.க. அரசு: 'அம்மா மினி கிளினிக்' மருத்துவர்கள் கண்ணீர்!

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியின்போது அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டது. அப்போது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் என பலர் நியமனம் செய்யப்பட்டனர். தற்போது திமுக ஆட்சியில் அவர்களுக்கு சம்பளம் சரிவர வழங்காமல் இழத்தடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டு மாதமாக சம்பளம் வழங்காமல் இழுத்தடிக்கும் தி.மு.க. அரசு: அம்மா மினி கிளினிக் மருத்துவர்கள் கண்ணீர்!
X

ThangaveluBy : Thangavelu

  |  3 Nov 2021 5:00 AM GMT

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியின்போது அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டது. அப்போது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் என பலர் நியமனம் செய்யப்பட்டனர். தற்போது திமுக ஆட்சியில் அவர்களுக்கு சம்பளம் சரிவர வழங்காமல் இழத்தடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியின்போது 2,000 இடங்களில் அம்மா மினி கிளினிக் துவக்கப்பட்டு, பொதுமக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கு என்று 1900 மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அப்போது மருத்துவர்களுக்கு மாதம் 60 ஆயிரம் மற்றும் பயணம் செலவுக்கு 400 ரூபாய் வழங்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மினி கிளினிக்குகள் பல தடுப்பூசி மற்றும் கொரோனா பரிசோதனை மையங்களாக மாற்றப்பட்டது. சில இடங்களில் மூடப்பட்டது. இதனால் 500க்கும் மேற்பட்டோர்கள் தங்களின் பணிகளை விட்டு சென்றனர்.

இதனிடையே தற்போதைய ஆட்சியில் 1000த்துக்கும் மேற்பட்டோர்கள் தடுப்பூசி போடும் பணி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மக்களை தேடி மருத்துவம் உள்ளிட்டவற்றில் பணி அமர்த்தப்பட்டுள்ளது. அதில் தொடர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்களுக்கு இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்காமல் திமுக அரசு இழுத்தடித்துள்ளது.

இது தொடர்பாக அம்மா மினி கிளினிக் மருத்துவர்கள் கூறுகையில், அதிமுக ஆட்சியின்போது அம்மா மினி கிளினிக்கில் பணியில் சேர்த்தனர். இதன் பின்னர் திமுக ஆட்சி அமைந்த பின்னர் மினி கிளினிக் மூடப்பட்டது. பலர் பல்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். தற்போதைய நிலையில் தொடர்ந்து பணியாற்றி வரும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்காமல் உள்ளது. தற்போது தீபாவளி பண்டிகையை கூட சந்தோஷமாக கொண்டாட முடியாத நிலையில் உள்ளோம். எனவே தமிழக அரசு உடனடியாக நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும் என்று கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளனர்.

Source, Image Courtesy: Dinamalar


Next Story
கதிர் தொகுப்பு
Trending News