24 ஏக்கர் நிலத்தை அபகரித்த தி.மு.க பிரமுகர் - புகார் அளித்த உரிமையாளரை ஓட ஓட விரட்டி வெட்டினார்.!
24 ஏக்கர் நிலத்தை அபகரித்த தி.மு.க பிரமுகர் - புகார் அளித்த உரிமையாளரை ஓட ஓட விரட்டி வெட்டினார்.!
By : Mohan Raj
"நில அபகரிப்பு சட்டம்" என்ற ஓர் சட்டம் உருவாக காரணமே தி.மு.க'வினர்தான். கடந்த 2005 முதல் 2010 வரையிலான தி.மு.க ஆட்சியின் காலகட்டத்தில் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தி.மு.க'வினர் சாதாரண மக்கள் முதல் ரியல் எஸ்டேட் அதிபர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் வரை அனைவரிடமும் நிலத்தை வலுக்கட்டாயமாக பிடுங்கி தனது பெயரில் மாற்றி ஆக்கிரமிப்பு செய்து அடாவடி செய்து வந்தனர் இதனை 2011'ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதாவின் தலைமையிலான அ.தி.மு.க அரசு மக்களின் துயரை கண்டு "நில அபகரிப்பு சட்டம்" என்ற ஓர் சட்டத்தை இயற்றி நிலத்தை பறிகொடுத்த மக்களை காப்பாற்றியது.
பின் பத்து ஆண்டுகள் ஆட்சியில் இல்லை என்றாலும் தி.மு.க'வின் நில அபகரிப்பு ரவுடியிசம் குறைந்தபாடில்லை அந்த வகையில் கோவையில் தன் மீது நில அபகரிப்பு புகார் கொடுத்த நபரை தி.மு.க பிரமுகர் ஒருவர் ஓட ஓட அடித்து உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம், சிங்காநல்லூரில் 24 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக, அதே பகுதியை தி.மு.க'வை சேர்ந்த மீன்கடை சிவா ஆக்கிரமிப்பு செய்து கொண்டார். இதனையடுத்து அந்த அந்த இடத்துக்கு சொந்தக்காரரான மாசானமுத்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் அண்மையில் புகார் அளித்துள்ளார்.
இதனை அறிந்த தி.மு.க'வை சேர்ந்த மீன் கடை சிவா மற்றும் அவருடைய அடியாட்கள், மாசானமுத்துவிற்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், உயிருக்கு பயந்து ஊரை விட்டுச் சென்ற மாசானமுத்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மீண்டும் கோவை திரும்பியுள்ளார். இந்நிலையில் மாசானமுத்துவை தி.மு.க'வை சேர்ந்த மீன் கடை சிவா மற்றும் அவரது அடியாட்கள் ஓட ஓட தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் காயமடைந்த மாசானமுத்து தனியார் மருத்துவமனையில் முதலுதவி பெற்ற பின்னர் கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரணிடம் புகார் மனுவை அளித்தார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தி.மு.க'வை சேர்ந்த மீன் கடை சிவாவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.