உள்ளாட்சித் தேர்தலில் குறைவான வாக்குகள் பெற்றதால், அ.தி.மு.க வேட்பாளரை வீடு புகுந்து தாக்கிய தி.மு.கவினர் !
By : Dhivakar
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளரை வீடு புகுந்து தாக்கி, திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குடியாத்தம் அருகே சைனாகொண்டுவை சேர்ந்த அ.தி.மு.க வேட்பாளர் மேகலா என்பவர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார், வேட்புமனுவை திரும்பப் பெறும்படி தி.மு.க மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் மேகலாவை மிரட்டியுள்ளனர். தேர்தலில் மேகலாவை எதிர்த்துப் போட்டியிட்ட. தி.மு.க வேட்பாளர் கோதண்டன் குறைவான வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றார், வாக்கு குறைந்ததற்கு மேகலா தான் காரணம் என்று தி.மு.கவின் சிட்டிபாபு மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ரகுபதி ஆகியோர் மேகலாவுக்கு செல்போன் மூலம் கொலை மிரட்டல் விடுத்தனர்.
இந்நிலையில் அடியாட்களுடன் சேர்ந்து மேகலா வீட்டுக்கு சென்ற அவர்கள் மேகலாவையும், அவரது கணவர் அலாவுதீனையும் ,அவர்களது வீட்டையும் சரமாரியாக தாக்கினர். இந்நிலையில் இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டபோது, தி.மு.க'வினர் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல்துறையினர் மேகலா தரப்பை விசாரணைக்கு அழைத்துள்ளனர். மேலும் மேகலா தரப்பினரிடம் " புகாரை திரும்பப் பெறாவிட்டால் பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைபோம்" என காவல்துறையினர் மிரட்டல் விடுப்பதாக மேகலாவின் கணவர் குற்றம்சாட்டியுள்ளார்.
" ரகுபதி மற்றும் சிட்டிபாபு அடியாட்களுடன் வந்து எங்களை தரக்குறைவாக பேசினர், பின்னர் எங்களையும் எங்கள் வீட்டையும் சேதப்படுத்தினர்" என்று ரத்தக்காயங்களுடன் மேகலா வருத்தத்துடன் கூறினார்.
"வழக்கு எல்லாம் வேண்டாம் பேசி தீர்த்து விடலாம், வழக்கு என்று வந்துவிட்டால் உங்களை பொய் வழக்கில் தான் தள்ளவேண்டும்" என்று தி.மு.க'வினர் சார்பாக செயல்படும் காவல்துறையினர் பற்றி வேதனையுடன் கூறுகிறார் மேகலாவின் கணவர்.
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் இது போன்ற அராஜகங்கள் நடந்தது குறிப்பிடத்தகுந்தது.