திருப்பூரில் ஸ்டாலின் பிரச்சாரம் செய்த ஊரில் டெபாசிட்டையே பறிகொடுத்த தி. மு.க : எவ்வளோ ஓட்டு வாங்கினார் தெரியுமா?

By : Kathir Webdesk
தமிழகத்தில் சென்னை, தாம்பரம், ஆவடி, காஞ்சிபுரம், திருச்சி, மதுரை, கோவை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் மொத்தமுள்ள 12,820 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த சனிக்கிழமை (19ம் தேதி) தேர்தல் நடந்தது. 12,870 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு 57,746 பேர் போட்டியிட்டனர். மொத்தம் 60.70 சதவீதம் வாக்குகள் பதிவானது.
இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம், குண்டடத்தில், திமுக படுதோல்வியை சந்தித்துள்ளது. குண்டடம் 9வது வார்டில் போட்டியிட்ட திமுக வெறும் 30 வாக்குகளை மட்டுமே பெற்று டெபாசிட் தொகையை கூட பெற முடியாத அளவுக்கு படுதோல்வியை சந்தித்துள்ளது. அதே வார்டில் பாஜக வேட்பாளர் 230வாக்குகளை பெற்றுள்ளார்.
உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருப்பூர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காணொலி காட்சி மூலம் தேர்தல் பிரசாரம் செய்த நிலையிலும் இப்படியொரு நிலை ஏற்பட்டது. அப்பகுதி திமுகவினரிடையே அதிருப்தியை ஏற்ப்படுத்தியுள்ளது.
