'எல்லாரும் சின்னவர் கூட்டத்துக்கு ஆள் அழைச்சுட்டு வந்துடுங்க' - அமைச்சர் உதயநிதி கலந்து கொள்ளும் கூட்டத்திற்கு ஆள் சேர்க்க ரேஷன் கடை ஊழியர்களுக்கு உத்தரவு
கோவையில் நடைபெற உள்ள கூட்டத்திற்கு உதயநிதி கலந்து கொள்வதற்காக கூட்டத்தில் ஆள் சேர்ப்பதற்கு ரேஷன் கடை ஊழியர்களை கட்டாயத்தின் பேரில் அழைக்கும் உத்தரவு.
By : Bharathi Latha
கோவை கொடிசியாவில் டிசம்பர் 25ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சருக்கு உதயநிதி கலந்து கொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தற்பொழுது இந்த நிகழ்ச்சிக்காக ஆள் சேர்க்கும் கூட்டத்தை தி.மு.க கையில் எடுத்து இருக்கிறது. குறிப்பாக, இந்த நிகழ்ச்சிக்கு அனைத்து ரேஷன் கடை ஊழியர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று கோவை சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து தற்பொழுத செய்தி ஒன்று வாட்ஸ் அப்பில் அனுப்பப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்த இருக்கிறது.
இதுகுறித்து மதுக்கரை சார் பதிவாளர் எந்தெந்த ரேஷன் கடை ஊழியர்கள் இந்த நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள இருக்கிறார்கள். அவர்களுக்கு வேண்டிய வாகன வசதிகளை ஏற்பாடு செய்வதற்காக தற்பொழுது தீவிர ஏற்பாடு நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. அனைத்து கூட்டுறவு சார்பதிவாளர் பல அலுவலர்கள் அவர்களது வட்டத்திற்குட்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்களை தொடர்பு கொண்டு, நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள வரும் பயனாளர்களை அழைத்து வருவதற்கான பிக்கப் பாய்ண்டுகளை கூட்டுறவு துறை மூலம் அழைத்துவரும் பயனாளிகளுக்கான வாகன ஒதுக்கீட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் உறுதி செய்து கொள்ளவும்.
அழைத்துவரும் பயனாளிகளின் எண்ணிக்கை விவரங்களை தெரிவிக்குமாறு செய்தி வெளியாகியிருக்கிறது. இந்த ஒரு தகவல் காரணமாக கோவையில் ரேஷன் கடை ஊழியர்கள் தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ஏனெனில் ரேஷன் கடை ஊழியர்கள் கட்டாயம் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கிறது இதன் மூலம் அமைச்சர் கூடும் கூட்டத்திற்கு ஆள் சேர்க்க முயற்சியா? இதுதான் திராவிட மாடலா? என்ற கேள்வியும் மக்கள் மனதில் எழுந்து இருக்கிறது.
Input & Image courtesy: News J