மனு அளித்த பெண்ணை தலையில் அடித்த தி.மு.க., அமைச்சர் - ஆணவத்தின் உச்சம் என மக்கள் கருத்து
By : Thangavelu
தி.மு.க., அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் நிகழ்ச்சி ஒன்றில் மனு அளிக்க வந்த பெண்ணை தலையில் தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் ராமச்சந்திரன் தனது சொந்த மாவட்டமான விருதுநகருக்கு சென்றார். அப்போது சில அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. அதே போன்று பாலவந்தத்தில் இலவச ஆடு வழங்கும் திட்டம் நிகழ்ச்சியில் அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்டார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த கலாவதி என்ற பெண் அமைச்சரிடம் மனு அளிக்க வந்தார்.
அவர் மனுவில் தன்னுடைய குடும்பம் கஷ்டத்தில் இருப்பதாகவும், வாழ்வாதாரத்திற்கு அரசு உதவ வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். அந்த பெண் அளித்த மனுவை கையில் வாங்கி வைத்திருந்த அமைச்சர் திடீரென்று அந்த மனுவால் பெண் தலையில் தாக்கினார். இதனால் அந்த பெண் அதிர்ச்சியடைந்தார். இது பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அமைச்சரின் செயலுக்கு கண்டனம் வலுத்து வருகிறது.
இந்நிலையில், தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாலை அமைச்சரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் என்ன உங்கள் அடிமைகளா? தீர்வு தேடி வந்த ஏழைத்தாயை அடித்த அமைச்சர் ராமச்சந்திரன் 48 மணி நேரத்தில் பதவி விலக வேண்டும். அப்படி இல்லை என்றால் அவரது வீட்டை தமிழக பா.ஜ.க., முற்றுகையிடும் என்று கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Source, Image Courtesy: Asianetnews