Kathir News
Begin typing your search above and press return to search.

அமைச்சர் கண்ணப்பன் பங்கேற்ற அரசு விழாவில் காற்றில் பறக்கவிட்ட சமூக இடைவெளி.!

இராமநாதபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் திரவ ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கொரானா வார்டினை தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் கண்ணப்பன் துவக்கி வைத்தார்.

அமைச்சர் கண்ணப்பன் பங்கேற்ற அரசு விழாவில் காற்றில் பறக்கவிட்ட சமூக இடைவெளி.!
X

ThangaveluBy : Thangavelu

  |  22 May 2021 3:46 PM IST

இராமநாதபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் திரவ ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கொரானா வார்டினை தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் கண்ணப்பன் துவக்கி வைத்தார்.

சுகாதாரத்துறை சார்பில் நடைபெற்ற விழாவில் தமிழக அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதன் முதலாக அரசு விழாவில் அமைச்சர் கண்ணப்பன் பங்கேற்க வந்ததால், வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை, ஊரகவளர்ச்சித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளையும் சார்ந்த அதிகாரிகள் வருகை புரிந்தனர்.




அதிகாரிகளை காட்டிலும் திமுகவினரே அதிகளவு கலந்து கொண்டனர். இதில் திமுக தொண்டர்களை போலீசார் தடுத்து நிறுத்த முடியால் திணறினர். அப்போது திமுகவினர் கூட்டத்தை பொருட்படுத்தாமல் முண்டியடித்துக்கொண்டு மருத்துவமனைக்கு உள்ளே சென்றனர். அரசு விழா என்பது அரசியல் விழா போன்று மாறிவிட்டது. வந்திருந்த அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையில் மிகத்தீவிரம் அடைந்துள்ள நிலையில், ஒரு அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் குறைந்தபட்ச சமூக இடைவெளியை கூட கடைப்பிடிக்காமல் கட்சி நிகழ்ச்சி போன்று நடத்திய சம்பவம் நோயாளிகளிடம் மட்டுமின்றி பொதுமக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




ஊருக்கு மட்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கி வருகின்றார். ஆனால் சொந்த கட்சியை சேர்ந்த அமைச்சர் மற்றும் தொண்டர்களுக்கு சமூக இடைவெளி விதிவிலக்கா என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News