Kathir News
Begin typing your search above and press return to search.

அன்புடன் ஆண்டிமுத்து ராசா சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை! அடுத்து என்ன?

தி.மு.க எம்.பி ஆ.ராஜாவின் ₹55 கோடி மதிப்புள்ள நிலம் முன்னாள் அமைச்சராக இருந்தபோது லஞ்சப் பணத்தில் வாங்கப்பட்டதாக அமலாக்கத்துறை விளக்கம்.

அன்புடன் ஆண்டிமுத்து ராசா சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை! அடுத்து என்ன?
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  23 Dec 2022 2:34 AM GMT

தி.மு.க ஆட்சியில் ஊழலுக்கு பஞ்சமே இருக்காது. பல்வேறு விதமான ஊழல்கள் தி.மு.க ஆட்சியில் தான் நடந்தே இருக்கிறது. அந்த வகையில் தற்போதைய தி.மு.க மக்களவை எம்.பி ஆ.ராஜாவின் பினாமி நிறுவனத்தின் பெயரில் வாங்கப்பட்ட ₹ 55 கோடி மதிப்பிலான 45 ஏக்கர் நிலத்தை தமிழகத்தின் கோவையில் அமலாக்க இயக்குனரகம்(ED) தற்காலிகமாக பறிமுதல் செய்துள்ளது. 2004-2007 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தபோது, ஆ.ராஜா வழங்கிய சுற்றுச்சூழல் அனுமதிக்காக, மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் இருந்து க்விட் ப்ரோகோவாக பெற்ற லஞ்சப் பணத்தில் இருந்து நிலம் வாங்கப்பட்டதாக ED தெரிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த 2015-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கில் தி.மு.க தலைவர் மீது மத்திய புலனாய்வுத் துறை (CBI) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது .சென்னையிலுள்ள CBI சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், தி.மு.க தலைவர் ஆ.ராஜா, மத்திய அமைச்சராக இருந்தபோது ரூ.5.53 கோடி அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக CBI குற்றம்சாட்டியுள்ளது. 2007 ஜனவரியில் கோவை ஷெல்டர்ஸ் புரமோட்டர்ஸ் நிறுவனம், ஷெல் நிறுவனம் போன்ற வணிக நிறுவனங்களின் மீது CBI குற்றப்பத்திரிகை விவரங்களை தெரியப்படுத்தியது.

இந்த நிறுவனம் கோவையில் விவசாய நிலத்தை வாங்கியதாக தெரிகிறது. தி.மு.க தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராஜாவின் நெருங்கிய உறவினர்கள் இயக்குநராக இருந்த ஷெல் நிறுவனத்துக்கு ₹4.56 கோடி கொடுத்தது உட்பட ₹5.53 கோடி சொத்துக்களைக் குவித்துள்ளதாக அந்த நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. எனவே அவர் அமைச்சராக இருந்ததை பயன்படுத்தி நில விவசாய நிலத்தை நிறுவனம் வாங்கிய குற்றத்தை மறைப்பதற்காக லஞ்சம் வாங்கிய பணத்தில் தான் சொத்தை சேர்த்து இருக்கிறார் என்பதை அமலாக்கத்துறை உறுதி செய்து இருக்கிறது. மேலும் தற்போது வரை கிடைக்கப்பட்டுள்ள ஆதாரங்கள் அடிப்படையிலிருந்து ஆ ராசா அவர்களின் சொத்து மதிப்பில் சுமார் 579 சதவீதம் சொத்துக்கள் முறையற்ற பணத்தில் வாங்கப்பட்டதாக தெரிய வருகிறது. ஏற்கனவே இவர் ஊழல் குற்றச்சாட்டுகளில் பிரபலமான 2G ஊழலில் சிக்கி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: The Commune News
Next Story
கதிர் தொகுப்பு
Trending News