Kathir News
Begin typing your search above and press return to search.

தலைமறைவானார் கடலூா் தொகுதி தி.மு.க எம்.பி... கொடூர கொலை வழக்கு.. விடாது துரத்தும் மர்ம மரணம்..!

தலைமறைவானார் கடலூா் தொகுதி தி.மு.க எம்.பி

தலைமறைவானார் கடலூா் தொகுதி தி.மு.க எம்.பி... கொடூர கொலை வழக்கு.. விடாது துரத்தும் மர்ம மரணம்..!

MuruganandhamBy : Muruganandham

  |  10 Oct 2021 6:47 AM GMT

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகில் உள்ள, கடலூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி.ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலையில் கோவிந்தராசு என்ற தொழிலாளி கொடூரமான முறையில் அடித்து, கழுத்தை நெறித்துக் கொல்லப்பட்ட வழக்கில், ரமேஷின் உதவியாளர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவிந்தராசு கொலை வழக்கில் சிபிசிஐடி பிரிவின் விசாரணை சென்று கொண்டிருக்கிறது. வழக்குத் தொடர்பான முக்கிய ஆதாரங்களை அவர்கள் கைப்பற்றியுள்ளனர்.

கோவிந்தராசு கொலை தொடர்பாக, கடந்த மாதம் 20 ஆம் தேதி கடலூர் எம்.பி. ரமேஷ் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அடுத்த இரு நாட்களில் இந்த வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. அப்போதிலிருந்து அவர் காவல்துறையின் கண்காணிப்பு வளையத்தில் தான் வைக்கப்பட்டிருந்திருப்பார். அதனால் அவரின் இருப்பிடத்தைக் கண்டுபிடிப்பதில் எந்த சிக்கலும் இல்லை. அத்தகைய சூழலில் கொலை வழக்கின் முதன்மை எதிரியான ரமேஷை கைது செய்ய சிபிசிஐடி தயங்குவது ஏன்? என்று தெரியவில்லை.

கோவிந்தராசு கொல்லப்பட்ட பிறகு அவர் கொலை தொடர்பான ஆதாரங்களை அழித்ததாக குற்றம் சாட்டப்படும் ரமேஷ், இனியும் கைது செய்யப்படாமல் இருந்தால் வழக்கின் சாட்சியங்களை அழித்து விடுவார் என்பதால் உடனே கைது செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில், எம்பி ரமேஷ், முந்திரி ஆலைத் தொழிலாளா்கள் நடராஜன் (31), கந்தவேல் (49), அல்லாபிச்சை (53), வினோத் (31), சுந்தரராஜன் (31) ஆகிய 6 போ் மீது கடலூா் சிபிசிஐடி போலீஸாா் கொலை உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். முன்னதாக, முந்திரி ஆலைத் தொழிலாளா்கள் 5 பேரையும் விசாரணைக்காக வெள்ளிக்கிழமை இரவு சிபிசிஐடி போலீஸாா் அழைத்துச் சென்ற நிலையில், கொலை வழக்கின் கீழ் 5 பேரும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. எம்பி ரமேஷ் தலைமறைவானாா்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News