Kathir News
Begin typing your search above and press return to search.

பா.ம.க நிர்வாகி கொலை வழக்கு : அடித்துக் கொலை செய்தது ஊர்ஜிதம் ! தி.மு.க M.P தலைமறைவு !

பா.ம.க நிர்வாகி கொலை வழக்கு :  அடித்துக் கொலை செய்தது ஊர்ஜிதம் ! தி.மு.க M.P தலைமறைவு !
X

DhivakarBy : Dhivakar

  |  9 Oct 2021 7:07 AM GMT


கடலூர் பா.ம.க நிர்வாகி கொலை வழக்கில் 5 பேர் கைது, தி.மு.க கடலூர் எம்.பி. டி.ஆர். ரமேஷ் தப்பி ஓட்டம் !

தி.மு.க ஆட்சிக்கு வந்தது முதல், அக் கட்சி நிர்வாகிகள் பல்வேறு சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்

அந்த வகையில், கடலூர் மாவட்டம், பணிக்கன்குப்பம் பகுதியில் திமுக எம்.பி. டி.ஆர்.வி.ரமேஷ் அவர்களுக்கு சொந்தமான முந்திரி ஏற்றுமதி நிறுவனம் இயங்கி வருகிறது . அந்நிறுவனத்தில் பணியாற்றிய தொழிலாளி மற்றும் பாமக நிர்வாகியுமான கோவிந்தராசு கடத்த மாதம் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.

"இவரது மரணம் கொலை என்றும் , இதற்கு எம்.பி. ரமேஷ் மற்றும் அவரது நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் தான் காரணம்" எனக் கூறி, அவரின் மகன் செந்தில்வேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

"கடந்த 19-ம் தேதி வேலைக்குச் சென்ற எனது தந்தை வீடு திரும்பவில்லை. அவர் விஷம் குடித்ததாக தகவல் கூறப்படுகிறது. மருத்துவமனைக்குச் சென்று பார்த்தபோது, அவரது உடலில் ரத்தக் காயங்கள் மற்றும் அடித்துதுன்புறுத்தியதற்கான அடையாளங்கள் காணப்பட்டது. எனவே, எனது தந்தை அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற வலுவாக சந்தேகம் எழுகிறது. என்று அவரது மகன் செந்தில்வேலின் கருத்தாக இருந்தது.

இந்த வழக்கு தமிழகம் முழுதும் பரபரப்பாக பேசப்படும் பொருளானது.

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க உத்தரவு பிறப்பித்தார்.

ஏ.டி.எஸ்.பி கோமதி தலைமையில் சி.பி.சி.ஐ.டி கடந்த செப்டம்பர் மாதம் 28 ம் தேதி விசாரணை தொடங்கப்பட்டது. கடலூர் சிபிசிஐடி ஆய்வாளர் தீபாவுடன் சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி முதற்கட்ட விசாரணையை தொடங்கினார்கள். விசாரணையில் கோவிந்தராஜ் அடித்து துன்புறத்தப்பட்டதாக அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் தைரியமாக வாக்குமூலம் அளித்தனர். இதனையடுத்து, கோவிந்தராஜை அடித்து, விஷம் கொடுத்து கொலை செய்தது ஊர்ஜிதமானது . இதனைத் தொடர்நது சிபிசிஐடி போலீசார் ஊழியர்கள் 5 பேரை கொலை வழக்கில் கைது செய்தனர். பின்னர் எம்.பி ரமேஷ் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எம்பி ரமேஷ் தலைமறைவாகியிருக்கும் நிலையில் அவரை போலீசார் தேடும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர் .

தி.மு.க ஆளும் கட்சியாக இருக்கும் நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிப்பதால் உண்மையான குற்றவாளிகளை அறிய பாகுபாடு காட்டப்படக்கூடாது என்பது அனைவரது கருத்தாகவுள்ளது.

Image : Nakkheran

Asianet



Next Story
கதிர் தொகுப்பு
Trending News