சிற்பத் தொழிலாளர்களுக்கு தொழிற்பேட்டை வரவுள்ள இடத்தில் தி.மு.க. தலைமை அலுவலகம் வருகிறதா?
சிற்பத் தொழிலுக்கு தொழிற்பேட்டை அமைவதில் சிக்கல், அந்த இடத்தில் தி.மு.க தலைமை அலுவலகம் வர இருக்கிறது.
By : Bharathi Latha
மாமல்லபுரம் அருகே கைவினை சிற்பத் தொழில்களுக்கு இடத்தை தேர்வு செய்வதில் தற்பொழுது சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. தற்போது வரை கைவினை சிற்பக் கலந்து கொடுக்கும் அரசு தரப்பினர்களுக்கு இடையே இந்த ஒரு பிரச்சனை காரணமாக இழுப்பறி நிகழ்ந்து வருகிறது. மாமல்லபுரத்தில் கி.பி ஏழு மற்றும் எட்டாம் நூற்றாண்டுகளில் இருந்து பல்லவ மன்னர்கள் காலத்தில் வடிவமைக்கப்பட்ட குடைவரை மற்றும் சிற்பங்கள், அக்காலத்தில் உருவான கைவலி சிற்பத் தொழிலில் சாதனையை இன்று வரை விளங்கி வருகிறது. அத்தகைய சிற்பக்கலையின் கலைஞர்களுக்கு தொழிற்பேட்டை அமைக்கும் முயற்சியாக தமிழக அரசுதான் நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில் தொழிற்பேட்டை அமைக்க உள்ள இடத்தை தற்போது தி.மு.க தலைமை அலுவலகம் அமைக்க இருப்பதாகவும், அதனால் மாற்றுக் இடத்தை தருவதாகவும் கூறி இருக்கிறது. இதற்கு சிற்பக் கலைஞர் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 300க்கும் மேற்பட்ட சிற்பக் கலைக்கூடங்கள் மாமல்லபுரத்தில் பல்வேறு வகையான சிலைகளை தயாரித்து வருகிறது.
மாமல்லபுரத்தில் உள்ள கடம்பாடியில் முதலில் திமுக அரசு சிட்கோ தொழிற்பேட்டை அமைதி இருப்பதாக கூறியிருந்தது. இந்நிலையில் அங்கு தி.மு.க தலைமை அலுவலகம் அங்கு அமைய இருப்பதாகவும் இதற்கான மிகச் சிறப்பு பணிகள் நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. சிக்கோ தொழில்கள் இன்று அமைந்தால் இடையூறாக இருக்கலாம் என்று கட்சியின் சார்பில் கூறப்பட்டுள்ளது.
இப்பகுதியில் தி.மு.க., தலைமை அலுவலகம் அமைய உள்ளதாகவும், இதற்கான நில சீரமைப்புப் பணிகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது. இங்கு, சிட்கோ தொழிற்பேட்டை அமைந்தால், இடையூறாக இருக்கலாம் என, அக்கட்சித் தலைமை கருதுவதாகத் தெரிகிறது. தற்போது முள்ளிக்கொளத்துார் பகுதியில் மாற்றாக தொழிற்பேட்டை அமைய இருப்பதை சிற்பக்கலை உரிமையாளர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
Input & Image courtesy: Dinamalar News