மயான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த தி.மு.கவினர் - கட்சி அலுவலகம் திறப்பதாக அட்ராசிட்டி!
பல்லடம் அருகில் உள்ள மயான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த திமுகவினர்.
By : Bharathi Latha
பல்லடம் அருகே மயான நிலம் தற்பொழுது ஆக்கிரமிப்பு செய்யப் பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஒரு நிலத்தை தி.மு.கவினர் ஆக்கிரமிப்பு செய்து இருக்கிறார்கள். கட்சி அலுவலகம் அமைத்து அங்கு புதிய கட்சி அலுவலகத்தை திறந்து இருக்கிறார்கள். குறிப்பாக மயானத்தில் மாவிலை தோரணம் கட்டி தங்களுடைய புதிய இடத்தில் கட்சி அலுவலகத்தை திறந்து இருக்கிறார்கள். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகில் தான் மாதப்பூர் என்ற கிராமத்தில் இந்த ஒரு நிகழ்ச்சி நடந்திருக்கிறது. குறிப்பாக அந்த கிராமத்தில் நான்கு ஏக்கருக்கு மேலாக மயான நிலம் இருக்கிறது. இதில் எந்த ஒரு அனுமதியும் பெறாமல் தி.மு.க தற்பொழுது கட்சி அலுவல அலுவலகமாக நேற்று திறக்கப்பட்டிருக்கிறது.
இதன் காரணமாக தற்பொழுது புகார்கள் எழுந்து இருக்கிறது. மயான நிலத்தை சமன் செய்து, அதில் சிமெண்ட் ஷீட் மற்றும் வெல்டிங் செய்து புதிய கட்டிடத்தை அமைத்து இருக்கிறார்கள். மேலும் இந்த ஒரு கட்டிட திறப்பு விழாவிற்கு பங்கேற்ற பொங்கலூர் ஒன்றிய சேர்மன் குமார் என்பவரிடம் இதற்குரிய உரிய விளக்கத்தைக் கேட்டபோது, இந்த இடத்தில் கிளை செயலாளர் கிட்டுசாமி என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஓட்டு கட்டிடம் அமைத்தார். அதை தற்போது சிமெண்ட் சீட் ஆக மாற்றி டீக்கடை அமைத்ததாக கூறினார். அவர் அழைத்ததன் பெயரில்தான் நான் பங்கேற்று இருக்கிறேன் என்று கூறினார்.
இது கட்சி அலுவலகம் கிடையாது. இது மயான பூமி இல்லையா? என்பதை வருவாய் துறையின் தான் ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும் என்று கூறுகிறார். தாசில்தார் அவர்களிடம் கேட்டபொழுது, இங்கு செட் அமைந்துள்ள பகுதி மயான பூமி என்று ஆவணங்கள் கூறப்பட்டிருக்கிறது என்று தெரிவித்து இருக்கிறார். மேலும் ஆக்கிரமிப்பு கட்டிடம் என்ற அடிப்படையில் அவற்றை அகற்றுவதற்கு உரிய காலக்கெடு வழங்கப்பட்ட நோட்டீஸ் அனுப்பப்படும் என்று கூறி இருக்கிறார்.
Input & Image courtesy: Dinamalar