Kathir News
Begin typing your search above and press return to search.

கோவை: கட்சியின் பெயர் பலகையை மறைத்த 'மரத்தை' அடியோடு வெட்டி சாய்த்த தி.மு.க.!

கோவை அடுத்த புலியகுளம் பகுதியில் உள்ள திமுக அலுவலகத்தின் பெயர் பலகைக்கு, இடையூறாக இருந்த மரத்தை 69வது வார்டு அக்கட்சியின் பொறுப்பாளர்கள் வெட்டி அகற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: கட்சியின் பெயர் பலகையை மறைத்த மரத்தை அடியோடு வெட்டி சாய்த்த தி.மு.க.!
X

ThangaveluBy : Thangavelu

  |  2 Jun 2021 5:03 PM IST

கோவை அடுத்த புலியகுளம் பகுதியில் உள்ள திமுக அலுவலகத்தின் பெயர் பலகைக்கு, இடையூறாக இருந்த மரத்தை 69வது வார்டு அக்கட்சியின் பொறுப்பாளர்கள் வெட்டி அகற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அக்கட்சியை சேர்ந்தவர்கள் செய்யும் அட்டூழியங்களுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. மக்களுக்கு எதிராக செய்து வந்தவர்கள் தற்போது இயற்கைக்கு எதிராகவும் செயல்பட ஆரம்பித்து விட்டனர். அந்த வகையில், கோவை பெரியார் நகரில் 69 வட்ட திமுக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அந்த கட்சியின் பெயர் பலகையில் கருணாநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் படங்கள் வரையப்பட்டுள்ளது.

இந்நிலையில், கட்சி அலுவலகத்தின் முன் பெரியார் நகர் பசுமை இயக்கம் சார்பாக பத்தாண்டுகளுக்கு முன்னர் நட்டு பராமரிக்கப்பட்டு வந்த ஒரு மரம், கட்சியின் பெயர் பலகையில் தலைவர்களின் ஓவியங்களை மறைத்தது. இதனால் ஆவேசமடைந்த திமுகவினர் உடனடியாக மரத்தை அடியோடு வெட்டி சாய்த்துள்ளனர்.

இந்த சம்வத்தால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இது பற்றி சமூக ஆர்வலர்கள் என சொல்லிக்கொள்ளும் ஒருவரும் கண்டனம் தெரிவிக்கவில்லை எனவும் அப்பகுதியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News