Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க மாநில நிர்வாகி சாலை மறியல்! சொந்தக் கட்சியினரிடமே நிலம் அபகரித்த தி.மு.க?

தி.மு.க மாநில நிர்வாகி சாலை மறியல்! சொந்தக் கட்சியினரிடமே நிலம் அபகரித்த தி.மு.க?

தி.மு.க மாநில நிர்வாகி சாலை மறியல்! சொந்தக் கட்சியினரிடமே நிலம் அபகரித்த தி.மு.க?
X

Saffron MomBy : Saffron Mom

  |  27 Jan 2021 11:30 AM GMT

தி.மு.க என்றாலே மக்களுக்கு ரவுடியிசம், ஊழல், மின்வெட்டு, ஆகியவற்றுடன் சேர்ந்து அப்பாவி பொதுமக்களிடம் இருந்து நிலத்தை அபகரிப்பதும் நினைவுக்கு வரும்.

2006-11 ஆட்சியில் இத்தகைய புகார்கள் எல்லை மீறி சென்றதால், 2011 இல் அமைந்த அ.தி.முக அரசு இதற்கு எனவே தனியாக புகார் பிரிவும், செல்லும் ஆரம்பிக்க வேண்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்சியின் இல்லாத பத்து வருடங்களில் கூட அவருடைய நில அபகரிப்பு புகார்கள் தொடர்ந்து அவ்வப்போது மீடியாக்களில் வந்து கொண்டேதான் இருக்கும். இந்நிலையில் பொதுமக்களுடைய நிலத்தை அபகரிப்பது போதாதென்று தற்பொழுது சொந்த கட்சிக்காரர்கள் இடமும், கட்சி நிர்வாகிகளிடம் இருந்து நிலத்தை தி.மு.க சுரண்ட தொடங்கியுள்ளது.

J நியூஸ் தொலைக்காட்சியில் வெளியிட்டுள்ள செய்தியின்படி, தி.மு.கவின் மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் பெருநாழி போஸ் ராமநாதபுரத்தின் கமுதியில் தன்னுடைய ஐந்து ஏக்கர் நிலத்தை தி.மு.க மாவட்ட நிர்வாகி முத்துராமலிங்கம் அபகரித்து விட்டதாக காவல் துறையில் புகார் அளித்து பலனில்லை என்று சாலை மறியலில் ஈடுபட்டார்.

இதனால் காவடிப்பட்டி அருகே அருப்புக்கோட்டை சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்த பிறகு போக்குவரத்து தொடர்ந்தது.

இப்படி சொந்தக் கட்சிக்காரர்களே இந்த நிலைமை என்றால் அதுவும் ஆட்சியில் இல்லாதபோது, ஆட்சிக்கு வந்தால் பொது மக்களின் நிலை என்ன ஆகும் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News