Kathir News
Begin typing your search above and press return to search.

குரூப் தேர்வு எழுதுபவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி., புதிய அறிவிப்பு வெளியீடு.!

குரூப் தேர்வு எழுதுபவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி., புதிய அறிவிப்பு வெளியீடு.!

குரூப் தேர்வு எழுதுபவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி., புதிய அறிவிப்பு வெளியீடு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 Dec 2020 7:52 PM GMT

தேர்வு எழுதுபவர்களுக்கு ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வதற்கு ஆதார் நம்பர் கட்டாயமில்லை என டி.என்.பி.எஸ்.சி., புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இது பற்றி அறிவிப்பில் கூறப்படுவதாவது: தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வானையம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது. அந்த அறிவிப்பில் டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் அனைவரும், அவர்களின் ஒரு முறைப்பதிவு மற்றும் நிரந்தர பதிவில், தங்கள் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும். இதுவரை, ஆதார் எண்ணை பதிவு செய்யாதவர்கள், விரைவில் பதிவு செய்ய வேண்டும்.

தேர்வர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட, ஒரு முறைப்பதிவு வைத்திருக்க அனுமதியில்லை. ஆனால் பலர் தவறுதலாக ஆதார் எண்ணை பதிவு செய்துள்ளதாக டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்திற்கு தெரிவித்திருந்தனர்.

அவர்களுக்கு ஒரு முறை மட்டும் தங்களின் ஆதார் எண்ணின் பதிவை ரத்து செய்து, தங்கள் விருப்பப்படி, நிரந்தர பதிவில் ஆதார் எண்ணை இணைக்க, https://www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலமாக வழிவகை செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வருகின்ற காலங்களில் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யும் முன் தங்களின் ஆதார் எண்ணையும் பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்படுகிறது. ஜனவரி 3ம் தேதி நடக்க உள்ள, ‘குரூப் -1’ முதல் நிலை தேர்வு, ஜனவரி 9, 10ல் நடக்க உள்ள தொழில், வணிக துறையில் உதவி இயக்குனர் பதவிக்கான தேர்வு ஆகியவற்றுக்கு, ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்கள் ஆதார் எண்ணை பதிவு செய்த பின், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கலாம் என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று (26ம் தேதி) வெளியிட்டுள்ள அறிவிப்பில் தேர்வர்களின் நலனை கருத்தில் கொண்டு தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வதற்கு ஆதார் எண் கட்டாயமில்லை என கூறப்பட்டுள்ளது.

குரூப் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் அனைவருமே புலம்பிக்கொண்டிருந்தனர். தற்போது தேர்வாணையம் வெளியிட்டுள் அறிவிப்பு சற்று அவர்களுக்கு மகிழ்ச்சியை தெரிவிக்கும் விதமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News