Kathir News
Begin typing your search above and press return to search.

வாட்ஸ்ஆப் வதந்திகளை நம்ப வேண்டாம்! தமிழகத்தில் யாருக்கெல்லாம் கொரோனா தடுப்பூசி?

வாட்ஸ்ஆப் வதந்திகளை நம்ப வேண்டாம்! தமிழகத்தில் யாருக்கெல்லாம் கொரோனா தடுப்பூசி?

வாட்ஸ்ஆப் வதந்திகளை நம்ப வேண்டாம்! தமிழகத்தில் யாருக்கெல்லாம் கொரோனா தடுப்பூசி?

Muruganandham MBy : Muruganandham M

  |  23 Jan 2021 7:27 AM GMT

முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு கடந்த 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப் பட்டு வருகிறது. நாடு முழுவதும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் மற்றும் சீரம் நிறுவனம் தயாரித்த கோவி ஷீல்டு தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகிறது.

இதில் தமிழகத்துக்கு மட்டும் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் 5,36,500 டோஸ், கோவாக்சின் மருந்து 20 ஆயிரம் டோஸ் மருந்துகள் வந்திருந்தது. இதில் 2 தடுப்பூசிகளும் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு சுகாதார பணியாளர் களுக்கு போடப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் முதல் நாளில் 166 மையங் களில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அதன் பிறகு மையங்கள் அதிகரிக்கப் பட்டு 172 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதில் இதுவரை 25 ஆயிரத்து 280 பேர் ‘கோவி ஷீல்டு தடுப்பு மருந்தும், 628 பேர் வாக்சின் தடுப்பு மருந்தும் போட்டுக் கொண்டுள்ளனர். 5 லட்சத்து 36 ஆயிரம் அளவுக்கு மருந்துகள் வந்திருந்த போதிலும் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு 50 சதவீதத்துக்கும் மேற் பட்டோர் தயக்கம் காட்டி வருகின்றனர். முன்பதிவு செய்தவர்களில் மிகக் குறைந்த அளவிலே வந்து தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில், கொரோனா தடுப்பூசி போடுவதற்கு நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. அதே போல் பதிவு செய்தவர்களுக்கு தடுப்பூசி போட யாருக்கும் மறுப் பும் தெரிவிப்பதில்லை. தாமாக முன் வந்து தடுப்பூசி போடுபவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்துகிறோம். சிலருக்கு பயம் வருவது இயல்புதான்.

இதில் விழிப்புணர்வு மிக முக்கியமாகும்.பொதுமக்கள் எல்லோருக்கும் நாங்கள் தடுப்பூசி போடவில்லை. சுகாதார முன்கள பணியாளர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் அதிகமான பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். பொதுமக்களும் தடுப் பூசி போடலாம் அறிவித்தால் ஒரே நாளில் மருந்து காலியாகி விடும். ஆனால் இப்போது அந்த நிலை இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News