Begin typing your search above and press return to search.
இந்த 4 துறையில் உள்ளவர்களுக்கு இபாஸ் அவசியமில்லை.. தமிழக காவல்துறை புதிய அறிவிப்பு.!
தமிழக காவல்துறை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், ஊடகம், பத்திரிகை, மருத்துவத்துறையினர், சுகாதாரத்துறையினர் மற்றும் வழக்கறிஞர்களுக்கு இபாஸ் அவசியமில்லை என கூறியுள்ளது.

By : Thangavelu
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் விதமாக கடந்த மே 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் காலை 6 மணி முதல் 10 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு பிறகு பொதுமக்கள் வெளியில் நடமாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக காவல்துறை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், ஊடகம், பத்திரிகை, மருத்துவத்துறையினர், சுகாதாரத்துறையினர் மற்றும் வழக்கறிஞர்களுக்கு இபாஸ் அவசியமில்லை என கூறியுள்ளது.
இத்துறையில் பணியாற்றுபவர்கள் தங்களது அடையாள அட்டையை காண்பித்தால் போதுமானது என காவல்துறை சார்பில் சுற்றரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
Next Story
