Kathir News
Begin typing your search above and press return to search.

விரைவில் சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைய உள்ள ரயில் நிலையங்கள் எவையெல்லாம் தெரியுமா?

விரைவில் 10 ரயில் நிலையங்களில் சோலார் மின்உற்பத்தி நிலையம் அமைய உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

விரைவில் சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைய உள்ள ரயில் நிலையங்கள் எவையெல்லாம் தெரியுமா?

KarthigaBy : Karthiga

  |  4 July 2023 12:00 PM GMT

திருச்சி ரயில்வே கோட்டத்தின் கீழ் உள்ள 10 ரயில் நிலையங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆற்றல் தேவையை கட்டுப்படுத்தவும் நாளடைவில் மின்சார பயன்பாட்டுக்கான கட்டணத்தை குறைக்கவும் சூரிய ஒளி மின்சக்தியை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


அதன்படி திருச்சி ரயில்வே கோட்டத்தின் கீழ் செயல்படும் ரயில் நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 நிலையங்களான சிதம்பரம், அரியலூர், கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, வேலூர், ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை ஆகிய ரயில் நிலையங்களில் பசுமை ஆற்றல் பயன்பாட்டிற்கு வழிவகை செய்யும் வகையில் சோலார் மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவப்பட உள்ளது.


இதன் முதற்கட்ட பணியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 10 ரயில் நிலையங்களில் ஒவ்வொரு நிலையங்களுக்கும் 10 கே.வி மின் உற்பத்தி திறன் கொண்ட சோலார் மின் உற்பத்தி நிலையங்களை வழங்குதல், நிறுவுதல், சோதனை செய்தல் மற்றும் இயக்குதலுக்கான டெண்டர்களை ரயில்வே கோட்ட அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். ரயில் நிலையங்களில் உள்ள நடைமேடைகளில் உள்ள மேற்கூரைகளில் சோலார் பேனர்கள் அமைத்து சூரிய சக்தியின் மூலம் மின் உற்பத்தி செய்யப்பட உள்ளதாகவும் இதற்கான செலவு ரூபாய் 45 லட்சம் ஆகும் எனவும் கூறினர்.


இந்த சோலார் மின் உற்பத்தி நிலையங்கள் மின்வினியோக அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. 10 ரயில் நிலையங்களில் நிறுவப்பட உள்ள இந்த சோலார் மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் மாதத்திற்கு 12000 யூனிட்டுகள் மின் உற்பத்தி செய்யப்பட்டு மாதம் மின்கட்டணத்தில் ரூபாய் ஒரு லட்சம் வரை குறையும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News