Kathir News
Begin typing your search above and press return to search.

அரசு அலுவலர்களின் போராட்டத்தில் குளிர்காய பார்க்கிறாரா ஸ்டாலின்?

அரசு அலுவலர்களின் போராட்டத்தில் குளிர்காய பார்க்கிறாரா ஸ்டாலின்?

அரசு அலுவலர்களின் போராட்டத்தில் குளிர்காய பார்க்கிறாரா ஸ்டாலின்?
X

Mohan RajBy : Mohan Raj

  |  28 Jan 2021 6:15 PM GMT

அரசு ஊழியர்கள் பிப்ரவரி 2'ம் தேதி முதல் நடத்தும் போராட்டத்திற்கு தி.மு.க ஆதரவு அளிப்பதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அதில், "தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மையத்தின் சார்பில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்று சில கருத்துகளைச் சொல்வதற்கு வாய்ப்பளித்த அரசு ஊழியர் சங்கத்தின் தலைவர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வழக்கமான மாநாடாக இல்லாமல், போராட்டத்துக்கான ஆயத்த மாநாடாக இதனைக் கூட்டி இருக்கிறீர்கள்.

இழந்ததை மீட்டிட இருப்பதைக் காத்திட' என்ற உங்களது அறிவிப்பிலேயே அனைத்தும் அடங்கிவிட்டது இன்றைய அ.தி மு.க. அரசு, அரசு ஊழியர்களின் அனைத்து உரிமைகளையும் பறித்துவிட்டது, இனிமேல் பறிப்பதற்கு எதுவும் இல்லை என்பதைச் சொல்லாமல் சொல்லி இருக்கிறீர்கள் தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கம், ஊரகவளர்ச்சி அலுவலர் சங்கம், வணிகவரிப் பணியாளர் சங்கம், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர் அனைவரும் சேர்ந்து உரிமை மீட்பு வெறும் பேரல்ல, புனிதப் போர் என்று அறிவித்துள்ளீர்கள்,

உங்களது கோரிக்கைகளை நான் பார்த்தேன் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது ஏற்படுத்தப்பட்ட குற்றக் குறிப்பாணையை நீக்க வேண்டும். மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியம் போன்றவர்கள், பணி ஓய்வின் போது தற்காலிகமாகப் பணி நீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும், மாத கால நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்

முடக்கப்பட்ட அகவிலைப்படியைத் தர வேண்டும். பறிக்கப்பட்ட சரண்டர் உரிமையை வழங்க வேண்டும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர்கள், உயர்ப்புற நூலகர்கள், எம்.ஆர்.பி செவிலியர்கள் உள்ளிட்ட, சிறப்பு காலமுறை ஊதியம் தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் மூன்றரை லட்சம் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம் வழங்க வேண்டும்.

2002-ஆம் ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்ட சாலைப் பணியாளர்கள் 41 மாத காலப் பணிக்கான ஊதியம் தர வேண்டும் என்ற கோரிக்கைகள் அனைத்திற்கும் தார்மீக அடிப்படையில் எனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன் திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைந்ததும் இக்கோரிக்கைகள் அரசால் பரிசீலிக்கப்பட்டு, உரிய நிவாரணம் வழங்கப்படும் என்ற உறுதிமொழியையும்

இந்த மாநாட்டின் மூலமாக அரசு ஊழியர்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனவும்,

"பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் தொடர் மறியல் போராட்டம் நடத்த இருப்பதாகவும், அது சிறை நிரப்பும் போராட்டமாக இருக்கும் என்றும் நீங்கள் அறிவித்துள்ளீர்கள். உங்கள் போராட்டத்தை தார்மீக அடிப்படையில் நாங்கள் ஆதரிக்கிறோம். கழக ஆட்சி அமைந்ததும், அரசு ஊழியர்கள் சங்கங்களை அழைத்துப் பேசி நல்ல முடிவுகளை எடுப்போம் என்பதைச் சொல்லி, உங்களை வாழ்த்தி விடை பெறுகிறேன்" எனவும் போராட்டத்தை அறிவித்திருக்கும் அரசு ஊழியர்களுக்கு வழ்த்துக்களை கூறி வழியனுப்பி வைத்துள்ளார்.

அரசு ஊழியர்களின் போராட்டம் என்பது அரசு இயந்திரத்தை நம்பி பிழைக்கும் அனைத்து மக்களின் தினசரி வாழ்க்கையை பாதிக்கும் ஓர் போராட்டமாகும். இதில் மக்களை பாதிக்காத வண்ணம் போராடுங்கள் என ஒரு வரி கூட கூறாமல் வாழ்த்துக்கள் கூறி வழி அனுப்புவதுதான் எதிர்கட்சி தலைவர் மாண்பா? அல்லது நான் ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் தமிழகத்தை மாற்றி காட்டுவேன் என மக்களை ஏமாற்றுவது பொய்யா?

ஊழியர்களின் உரிமை போராட்டம் முக்கியமானதே ஆனால் இதைவிட அவர்களை நம்பி அன்றாடம் பிழைக்கும் விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை மிக முக்கியம் அதை கவனத்தில் கொள்ளாமல் போராட்டத்திற்கு வாழ்த்துக்கள் கூறுவது எப்படியாவது போராட்டம் வெடிக்கட்டும் அதில் அரசியல் லாபம் பார்த்து தேர்தலில் வாக்குகளை வாங்கிவிடலாம் என்ற எண்ணமா திரு.ஸ்டாலின் அவர்களே?

Next Story
கதிர் தொகுப்பு
Trending News