Kathir News
Begin typing your search above and press return to search.

கடலூர் அருகே நாய் குட்டியை தாய்போன்று பராமரிக்கும் ஆண் குரங்கு.!

கடலூர் அருகே பிறந்த நாய் குட்டியை ஆண் குரங்கு ஒன்று வளர்த்து வரும் சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடலூர் அருகே நாய் குட்டியை தாய்போன்று பராமரிக்கும் ஆண் குரங்கு.!
X

ThangaveluBy : Thangavelu

  |  3 March 2021 9:13 AM IST

கடலூர் அருகே பிறந்த நாய் குட்டியை ஆண் குரங்கு ஒன்று வளர்த்து வரும் சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மேல்புளியங்குடி என்ற கிராமம். இந்த கிராமத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பிறந்த நாய் குட்டியை ஆண் குரங்கு ஒன்று பராமரித்து வருகிறது. இதனை அங்கு உள்ள மக்கள் வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

அந்த குரங்கிடமிருந்து நாய் குட்டியை மீட்க கிராம மக்கள் போராடியுள்ளனர். ஆனால் குரங்கு நாய் குட்டியை தூக்கிக்கொண்டு மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டது.

அதே நேரத்தில் நாய் குட்டி மிகுந்த உற்சாகமுடன் உள்ளதாகவும் கிராம மக்கள் சொல்கின்றனர். அதற்கான உணவுகளை எப்படி குரங்கு கொண்டு வந்து அளிக்கிறது என்பது எங்களுக்கே ஆச்சரியமாக உள்ளது என்று கிராம மக்கள் கூறி வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News