Kathir News
Begin typing your search above and press return to search.

"கோவிலுக்குப் போகாதே! பண்டிகை கொண்டாடாதே!"- திராவிடர் கழகம் புத்தக விநியோகம்.!

"கோவிலுக்குப் போகாதே! பண்டிகை கொண்டாடாதே!"- திராவிடர் கழகம் புத்தக விநியோகம்.!

கோவிலுக்குப் போகாதே! பண்டிகை கொண்டாடாதே!- திராவிடர் கழகம் புத்தக விநியோகம்.!

Shiva VBy : Shiva V

  |  15 Dec 2020 6:45 AM GMT

இந்து மதத்தை இழிவுபடுத்தும் விதமாக 'மயக்க பிஸ்கட்டுகள் ஜாக்கிரதை' அற பெயரில் திராவிடர் கழகம் மக்களிடையே புத்தகத்தை விநியோகித்து வருவது தெரிய வந்துள்ளது. ஏற்கனவே கந்த சஷ்டி கவசம், இந்து பெண்களை இழிவாக பேசுதல் போன்ற இந்து விரோத செயல்களில் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் ஈடுபட்டு வந்தன. எனினும் தேர்தல் நெருங்குவதால் தற்போது இந்து மதத்தையோ நம்பிக்கைகளையோ தரக்குறைவாக பேச வேண்டாம் என்று கட்சியினருக்கு மறைமுக உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் பா.ஜ.கவின் வேல் யாத்திரையால் ஏற்பட்ட பாதிப்பை குறைக்கும் முயற்சியாக தற்போது இப்படி ஒரு புத்தகத்தை திராவிடர் கழகம் மூலம் வெளியிட்டுள்ளது.கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலை நடத்தி வந்தவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐ.டி பிரிவில் இருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து தி.மு.க மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கும்பகோணத்தில் காவிகளுக்கு

எதிராக"மயக்க பிஸ்கட்டுகள்"

புத்தகம் பொதுமக்களுக்கு கொடுக்கபட்டது.

Posted by Ramesh Ramesh on Sunday, 13 December 2020

குறிப்பாக இந்து மதத்தை மட்டுமே இழிவாக பேசி வரும் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை எதிர்த்து இந்து மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்து அமைப்புகள் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் இந்து விரோத போக்கு குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 'தெய்வீக தமிழ்ச் சங்கம்' என்ற கூட்டமைப்பு மூலம் பிரச்சாரம் செய்து வருகின்றன.

இதன் ஒருபகுதியாக திருச்சியில் தொடங்கப்பட்ட தெய்வீக தமிழக சங்கத்தின் சார்பில் வீடு வீடாக துண்டு பிரசுரம் வினியோகிக்கப்பட்டது. அந்தத் துண்டுப் பிரசுரத்தில் "தேசியம் காக்க தமிழகம் காக்க ஒன்றுபட்டு செயல்படுவோம்" என்றும், "ஹிந்துக்களை அவமதிக்கும் அரசியல் கட்சிகளைப் புறக்கணிப்போம்" என்றும், "குழந்தைகளுக்கு இந்துக்களின் பாரம்பரியம் மற்றும் சமய பெருமைகளை சொல்லி வளர்ப்போம்" என்பது போன்ற கருத்துக்கள் அச்சிடப்பட்டு இருந்தன.

இதனால் தி.மு.கவின் இந்து வாக்கு வங்கிக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. மேலும் பெரியார் இயக்கங்களும் இந்த பிரச்சாரத்தால் எரிச்சலடைந்துள்ளன. எனவே இதற்கு போட்டியாக திராவிடர் கழகமும் "மயக்க பிஸ்கட்டுகள் ஓர் எச்சரிக்கை" என்ற தலைப்பில் 31 பக்கம் கொண்ட ஒரு புத்தகத்தை தயாரித்து மக்களிடம் கொடுத்து வருகின்றனர்.

தேர்தல் நேரத்தில் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது இந்துக்களின் ஓட்டுக்களை தி.மு.க இழப்பதற்கே வழிவகுக்கும் என்றும் பா.ஜ.கவின் வேலையை தி.க எளிதாக்கி விட்டது என்றும் பா.ஜ.க ஆதரவாளர்கள் கருதுகின்றனர். இதே எண்ணத்தில் தி.மு.கவிற்கு தேர்தல் வேலை பார்க்கும் பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனமும் இந்த புத்தக விநியோகத்தை நிறுத்துமாறு தி.மு.க தலைமைக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேர்தலில் வெற்றி பெற்று எப்படியாவது ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்ற நோக்கத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் நேரடியாக இது போன்ற செயல்களில் தற்போது ஈடுபடாமல் இருந்தாலும் ஆட்சியில் அமர்ந்த பின்னர் இந்து விரோத செயல்களைத் தொடரவே வாய்ப்பு அதிகம் என்று அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News