நீலகிரி ஆட்கொல்லி புலியை கொல்வதா ? அதிரடி உத்தரவை பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்றம் !
நீலகிரி மாவட்டம், மசினகுடியில் சுற்றித்திரியும் ஆட்கொல்லி புலியை கொல்ல வேண்டாம் என்று வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
By : Thangavelu
நீலகிரி மாவட்டம், மசினகுடியில் சுற்றித்திரியும் ஆட்கொல்லி புலியை கொல்ல வேண்டாம் என்று வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வனத்துறை சார்பில் புலியை கொல்லும் திட்டம் இல்லை. உயிருடன் பிடிக்கவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும், புலியின் கழுத்தில் ஏற்கனவே காயம் இருப்பதாகவும் கூறப்பட்டது.
இதனை பதிவு செய்த நீதிபதிகள் அந்த புலி ஆட்கொல்லி புலியாக இல்லாமல் கூட இருக்கலாம் என்பதால் அதனை உடனடியாக கொல்வதற்கு முயற்சிக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். மேலும், புலியை பிடிக்கும்போது மற்ற வனவிலங்குகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்த கூடாது எனவும், புலியை பிடித்த பின்னர் அதற்கு உரிய சிகிச்சைகள் அளிக்க நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Source, Image Courtesy: Polimer