திருச்செந்தூர் முருகன் கோவில் செல்போனுக்கு தடை - நீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்பு
திருச்செந்தூர் முருகன் கோவிலில் செல்போனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது, மீறினால் பறிமுதல் செய்யப்படும்.
By : Bharathi Latha
பல்வேறு கோவில்களில் அங்குள்ள சிலைகளை புகைப்படம் எடுப்பது போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபடுவதன் காரணமாக சிலை திருட்டு வழக்கில் ஈடுபடுபவர்கள் எளிதான முறையில் சிலைகளை அடையாளம் கண்டு அவற்றை எவ்வாறு திருடுவது? என்பது போன்ற பல்வேறு யுத்திகளை கையாண்டு வருகிறார்கள். இதன் காரணமாக கோவில் வளாகத்தில் செல்போன் உபயோகிப்பதற்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்பொழுது திருச்செந்தூர் முருகன் கோவில் அர்ச்சகர் உட்பட அனைவருக்கும் செல்போன் உபயோகிக்க தடை விதித்து நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரணை செய்த உயர் நீதிமன்ற மதுரை கிளை தற்பொழுது அர்ச்சகர் உட்பட அனைவரும் கோவில் வளாகத்திற்குள் செல்போன் உபயோகிக்க தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் நாகரீகமாக உடையில் கோயிலுக்கு செல்வதை தவிர்த்து இன்றைய காலகட்டங்களில் பல்வேறு தரப்பினர் டி-ஷர்ட், ஜீன்ஸ், லெக்கின்ஸ்,ஸ்கர்ட்ஸ் போன்ற பல்வேறு உடைகளில் தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கோவில் வளாகத்தில் செல்போன் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது மீறி பயன்படுத்துவோரின் செல்போன் பறிமுதல் செய்யப்படும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையை இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு அனுப்பி வழக்கை ஒத்தி வைத்து இருக்கிறார்கள்.
Input & Image courtesy: Polimer News