Kathir News
Begin typing your search above and press return to search.

மதுரை நெல்லை இடையே இரட்டை அகல ரயில் பாதை பணி.. ரயில் போக்குவரத்தில் திடீர் மாற்றம்.!

மதுரை நெல்லை இடையே இரட்டை அகல ரயில் பாதை பணி.. ரயில் போக்குவரத்தில் திடீர் மாற்றம்.!

மதுரை நெல்லை இடையே இரட்டை அகல ரயில் பாதை பணி.. ரயில் போக்குவரத்தில் திடீர் மாற்றம்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 Feb 2021 6:12 PM IST

மதுரை நெல்லை இடையே இரட்டை அகல ரயில்பாதை பணிக்காக தென்மாவட்ட ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நெல்லை - கங்கைகொண்டான் மற்றும் கோவில்பட்டி - கடம்பூர் ரயில்பாதை இணைப்பு பணிகள் நடைபெறுகிறது. இதற்காக மதுரை வழியாக திருவனந்தபுரம் வரை இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 28ம் தேதி வரை இருமார்க்கங்களிலும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் சென்னை - நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் வருகின்ற 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை மதுரை வரை மட்டும் இயக்கப்படுகிறது. மதுரை வழியாக கோவை வரை செல்லும் பகல் நேர சிறப்பு ரயில் வருகின்ற 24, 28ம் தேதி வரை இரு மார்க்கங்களிலும் மதுரையில் இருந்து இயக்கப்படுகிறது.

அதே போன்று சென்னை & குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் வருகின்ற 24,25,26,28 தேதி ஆகிய நாட்களில் விருதுநகர், ராஜபாளையம், தென்காசி, அம்பாசமுத்திரம் வழியாக நெல்லைக்கு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News