ABVP நிர்வாகியை சந்தித்த அரசு மருத்துவர் பணியிடை நீக்கம்: சகிப்புத்தன்மை இல்லாத தி.மு.க. அரசு!
By : Thangavelu
ஏபிவிபி தேசிய செயலாளர் நிதி திருப்பாதியை சிறையில் சந்தித்த கீழ்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர் சுப்பையா பணியிடை நீக்கம் செய்து திமுக அரசு உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூரில் கிறிஸ்தவ பள்ளியில் படித்து வந்த லாவண்யா என்ற மாணவி மதமாற்றத்தால் தனது உயிரை மாய்த்துக்கொண்டார். அவரது மரணத்திற்கு நீதி கேட்டு ஏபிவிபி அமைப்பினர் முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்டு தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதில் ஏபிவிபி தேசிய செயலாளர் நிதி திருப்பாதி மற்றும் அவருடன் 33 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று (பிப்ரவரி 17) ஏபிவிபி தேசிய செயற்குழு அழைப்பாளர் டாக்டர் சுப்பையா சண்முகம் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிதி திரிபாதியை நேரில் சந்தித்து ஆறுதலை தெரிவித்தார். இதனை தாங்கிக்கொள்ள முடியாத திமுக அரசு அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. டாக்டர் சுப்பையா அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவனை புற்றுநோய் துறை தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவர் சிறையில் இருக்கும் நிலையில் சந்திப்பதை ஏன் திமுக அரசால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்டவர்களை சந்திக்கக்கூடாது என்ற விதி ஏதேனும் உள்ளதா எனவும் கேள்வி எழுந்துள்ளது. இதனை பார்த்தால் தற்போதைய திமுக அரசுக்கு சகிப்பு தன்மை இல்லை என்றே தோன்றுகிறது.
Source, Image Courtesy: Puthiyathalaimurai