அரசு பள்ளி எதிரே குப்பைகளை கொட்டும் நிர்வாகம்: நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்?
அரசு பள்ளி எதிரே குப்பைகளை கொட்டுவதால் மாணவர்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகிறது.
By : Bharathi Latha
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி நகரில் மொத்தமாக 30 வார்டுகள் உள்ளன. இந்த 30 வார்டுகளில் இருந்தும் தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரிப்பதற்காக கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே திடக்கழிவு மையம் உள்ளது. அப்படி திரட்டப்படும் குப்பைகளை காலியாக உள்ள இடத்தில் டன்கணக்கில் கொட்டப்படுகிறது. இந்த குப்பை கழிவுகளை ஆடு, மாடுகள் கூட்டம் கூட்டமாக வந்து சாப்பிடுகிறது. இது மட்டுமின்றி இந்த குப்பைகளில் இருந்து அதிக அளவு துர்நாற்றம் வீசுவதால் பல்வேறு பிரச்சினைகளும் எழுகின்றது.
அரசு பள்ளி எதிரே இதகைய குப்பைகளை மாநகராட்சி நிர்வாகம் கெட்டுவதாக பள்ளி தரப்பில் கூறப்பட்டு இருக்கிறது. பள்ளியில் படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கால்நடை ஆஸ்பத்திரியில் பணிபுரியும் டாக்டர்கள், ஊழியர்கள் ஆகியோருக்கும் நோய் தொற்று பரவும் அபாயம் இருக்கிறது. மேலும் துர்நாற்றத்தோடு தினம்தோறும் மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்து படிக்கும் அவல நிலையும் உள்ளது.
இதன் காரணமாக நந்திவரும் கால்நடை ஆஸ்பத்திரி வளாகத்தில் குப்பையை கொட்டுவதற்கு எதிர்பார்ப்பு தெரிவித்து பொதுமக்கள், கால்நடை டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். மேலும் புகார் அளித்தும் அலட்சியத்தோடு மாணவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் என்பது கூட இல்லாமல் தினம் தோறும் குப்பைகளை இங்கு கொட்டி வருகிறார்கள். இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் இடம் நேரில் சென்று நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: Thanthi News